சமூக ஊடகம்

கேள்வி: எனக்கு 22 வயதாகிறது. எனது கடவாய் பல் ஒன்று பூச்சிப் பல்லாக இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்று காண்பித்த போது, அங்கு பயிற்சி மருத்துவகள் தான் பற்களை சோதிக்கிறார்கள்.

அந்த மருத்துவர் உடனடியாக பல்லை பிடுங்க வேண்டும் என்று சொல்லிய உடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னென்னவோ நவீன முறைகள் எல்லாம் வந்து விட்டன, லேசான பூச்சிப்பல்லை பிடுங்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி விட்டு, தனியார் மருத்துவமனைக்கு வந்த போது, எனக்கு அந்த மருத்துவர் ரூட் கேன் ஆல் செய்து, பின்னர் அந்த பல்லுக்கு கேப்பும் போட்டு விட்டார். இப்போது எனக்கு பல் நன்றாக இருக்கிறது. நான் அப்போதே அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவரின் அறிவுரையைக் கேட்டு, உடனடியாக பல்லை எடுத்து இருந்தால் என்னாவது? பயமாக இருக்கிறது டாக்டர்.

என்போல வேறு யாருக்கும் இது போல நடக்க கூடாது என்பதற்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? - சுரேஷ்குமார், சென்னை அண்ணாநகர்.

பல் மருத்துவர் வித்யா சபரி பதில்:"நான் சொல்லப்போகும் ஒரு கேஸ் ஹிஸ்டரி இளம் மருத்துவர்களுக்கு உபயோகமாக கூட இருக்கலாம். பயிற்சி மருத்துவர்கள் முதலில் வேளையில் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். உங்கள் போல கேஸ்களை நானும் அட்டெண்ட் செய்து இருக்கிறேன். அவரும் லேசான சொத்தைப் பல்லுடன்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரையும் பல்லை பிடுங்கி விடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பற்களில் பல நவீன மருத்துவம் வளர்ந்து விட்ட இந்த காலக் கட்டத்தில் எவர் ஒருவருக்கும் பல்லை பிடுங்கிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

நான் அட்டெண்ட் செய்த ஒரு கேசைப் பற்றிக் கூறினால், உங்களுக்கு மருத்துவர்கள் என்பவர்கள் எப்படி கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

எனக்கு ஒருநாள் ஒரு பெண்மணி போன் செய்தார். அவர் போனில் கூறியபடி, 45 வயதான ஒரு ஆண், அவர் பெயர் மணிவண்ணன் என்று வைத்துக் கொள்ளலாமே..அவர் மூளை வளர்ச்சி சரியில்லாதவர். அவர் எந்த வயதில் பல் துலக்கினார் என்று கூட தெரியாது. அவர் அருகில் போக முடியாதபடி, வாய் துர்நாற்றம் அடிக்கிறது. பற்கள் அத்தனையும் கருப்பாக உள்ளது. நீங்கள் வந்து பார்க்க முடியுமா என்று கேட்டார்கள்.

நான் எனது உதவியாளர்கள் மட்டும் இன்றி எனது கணவரையும் அழைத்துக் கொண்டு சென்றேன். அவரை பார்த்தபோது, என்னவோ போலத்தான் இருந்தது. என்னை பார்த்தவுடன், அவர் தம்மை ஏதோ செய்ய போகிறார்கள் என்று என்னை அருகில் நெருங்கவே விடவில்லை.

அவர் என்னை நட்புடன் பார்க்க மூன்று சிட்டிங் எடுத்துக் கொண்டு, அவருடன் பழகுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு 3 சிட்டிங் உட்கார்ந்தேன். பின்னர் அவருக்கு என்மீது நம்பிக்கை வந்துவிட்டது. பின்னர் ஆ காட்டுங்கள் என்று சொன்னால் ஒரு செகண்ட் வாயைத் திறந்து மூடிக் கொள்வார்.பின்னர் ஒரு வழியாக தொடர்ந்து 2 நிமிடங்கள் வாய் திறந்து வைக்கும்படி பழக்கினேன்.

அவருக்கு வாயில் இருந்த நோய்கள், வாய் துர்நாற்றம், சுத்தமின்மை, ஈறுகளில் பூஞ்சை, சில பற்கள் உடைந்து போயிருந்தன. இதனால், அந்த பற்கள் நாக்கில் குத்தி அங்கங்கு வாயில் காயம். 5 பற்கள் அழுகி இருந்தன. பிறகு சில பற்களை காணவில்லை, அவரே கூட விழுங்கி இருக்கலாம்.

இதில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று ஆலோசித்து, முதலில் வாயை சுத்தம் செய்ய ஜெல் ஒரு இரவு தடவி வைத்தேன். அடுத்த முறை அவர் கோ ஆப்பரேட் செய்ய, அடுத்தடுத்து வேலைகள் நடைபெற ஆரம்பித்த போது, அவரே தனது வாய் புத்துணர்ச்சியாக இருப்பதை உணர்ந்து இருப்பார் போலும்.

அடுத்த சிட்டிங்கில் நன்றாக கோ ஆப்பரேட் செய்ய ஆரம்பித்தார் என்றாலும், அவரை ஒரு குழந்தை போல, வாயை திறங்கள், மூடாதீர்கள் என்று ஒருவர் கூறுவதும், மற்றொருவர் கதை சொல்வதுமாக அவரின் பிரச்சனைகள் அனைத்தையும் முடித்தேன். இதில் ஒரு நாளைக்கு 3 மணி நேரம், என்று மூன்று நாள் செலவிட்டு இருந்தேன். இப்போது அவர் தினமும் பல் தேய்த்து மவுத் வாஷ் உபயோகிக்கும் அளவுக்கு தயாராகி உள்ளார்.

எனக்கென்ன போச்சு என்று , நான் அவரின் அத்தனை பற்களையும் பிடுங்கி இருந்தால், அவர் இப்போது இந்தளவுக்கு தேறி இருப்பாரா? எனவே, பயிற்சி மருத்துவர்கள், சீனியர் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று நோயாளிகளை கவனிப்பது நல்லது. மருத்துவர்கள் என்பவர்கள் கடவுள்கள் போல என்று மக்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள். அதை கட்டிக் காப்பது ஒவ்வொரு மருத்துவரின் கடமை அல்லவா?

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.