சமூக ஊடகம்
Typography

தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பேஸ்புக் பக்கம் 'தூய தமிழ்ச்சொற்கள்'.

தமிழ் அவமானம் அல்ல, 'அடையாளம்' எனக்கூறி நிற்கும் இப்பக்கத்தில் தொன்மை தமிழின் சிறப்புக்கள், எழுத்து, ஒலி வடிவங்கள், பண்டைய அழகிய தமிழ்ச்சொற்கள், தமிழ் பெயர்கள் என ஏராளம் குவிந்து கிடக்கின்றன.


உதாரணத்திற்கு எமக்கு தெரிந்திருந்தும் நாம் அதிகமாக பயன்படுத்தாத சொற்கள் சில :

நகல் - படி
தேகம் - உடல்
துரோகம் - இரண்டகம்
தொப்பி – கவிப்பு
நிமிசம் - மணித்துளி
அநர்த்தம் - அழிவு, கேடு
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - நடுவின்மை, முறைகேடு

இசைக்கருவிகள் சிலவற்றின் தமிழ் பெயர்கள் :

தூய தமிழ்ப் பெயர்கள்இப்பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்வதன் மூலம் தமிழ் மொழி பற்றி அரிதான தகவல்களை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். 

தூய தமிழ்ச்சொற்கள் : பேஸ்புக் பக்கத்திற்கு செல்ல

BLOG COMMENTS POWERED BY DISQUS