சமூக ஊடகம்
Typography

கடந்த வருடம் தொடங்கப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பக்கத்தின் முக்கிய தார்ப்பரிய கோட்பாடு : மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

மரம், மரம் வளர்ப்பு, காடுகள், வேளாண்மை, முலிகை செடிகள், வீட்டு தோட்டம், வேளாண்மை சார்ந்த பண்ணை, தொழில்கள் சுற்றுச்சூழல் மாசு படுத்தல், உலக வெப்பமயமாதல், வேளாண்மை சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி வணிகம், மரம் வளர்ப்பு முறைகள், பயிர் சாகுபடி, நோய் தடுப்பும் பராமரிப்பு முறைகளும், இயற்கை வேளாண்மை, வேளாண்மை சார்ந்த நிறுவனங்கள் என இவை சார்ந்த பதிவுகளுக்கு மட்டுமே இங்கு இடமுண்டு.

தயவு செய்து, ஜோக்குகள், கவிதைகள், பாட்டு, சினிமா, அரசியல் மற்றும் ஆபாசம் போன்ற பதிவுகளை தவிருங்கள் என்ற அன்பான கோரிக்கையோடு தமது பேஸ்புக் பக்கத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இவர்களுடைய பேஸ்புக் Fanpage பக்கம் அனைவரும் பார்க்க கூடியது. ஆனால் இவர்களுடைய மரம் எனும் குழுமம் ஒரு Close Group. தாராளமாக நீங்கள் இதில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இந்த குழுவில் சேர்ந்த பிறகு  குறைந்தது ஒரு மரமாவது நட்டு அதை வாழ்நாள் முழுவதும் பரமரிப்பேன் என்றும், மரங்களின் பயன்களை / அவசியத்தை, என்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு தெரியபடுத்துவேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ளுங்கள். அதன்படி நடவுங்கள் என்கிறார்கள்.

இதுவரை இவர்களது குழுவில் 85,983 க்கு மேல் அங்கத்துவர் இருக்கின்றனர். நீங்களும் இப்பக்கத்தை பார்வையிட :

http://www.facebook.com/treepage

BLOG COMMENTS POWERED BY DISQUS