சமூக ஊடகம்

சீனாவின் முன்னணி நடிகையும் ஹாலிவுட் பிரபலமுமான ஃபேன் பிங்பேங் ஊடகங்களின் கண்ணுக்கும் பொது மக்கள் மத்தியிலும் திடீரென ஜூலை 23 முதல் தென்படாது போயுள்ளார்.

ஜூலை 1 முதல் தனது சமூக ஊடக செயற்பாடுகளை நிறுத்திய இவர் ஜூலை 23 முதல் பொது மக்களுக்குத் தெளிவாகக் கண்ணில் படாத நிலையிலும் காணாமற் போயுள்ளார்.

இவர் அரசுக்கு வரிப் பணத்தை நீண்ட நாட்கள் செலுத்தாது இருந்த காரணத்தால் கைது செய்யப் பட்டிருக்கலாம் என இவர்களின் சில ரசிகர்கள் ஊகம் தெரிவித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த நடிகையான இவர் தனது நடிப்புத் திறன் மூலம் பெரும் செல்வத்தையும் வெற்றியையும் சம்பாதித்து வந்தவர் ஆவார். செப்டம்பர் 16, 1981 இல் சீனாவின் கிங்டாவோ இல் பிறந்து யாண்டாய் இல் வளர்ந்த இவர் 1996 முதல் சீனாவின் பொழுதுபோக்குத் துறையில் கால் பதித்து வருகின்றார்.

திரைப்படத் துறையில் பல விருதுகளை வென்ற இவர் 2014 இல் X-Men Days of Future Past படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் உலகிலும் பிரவேசித்தார். தற்போது பிங்பிங் தங்கியிருக்கும் இடம் வெளி உலகுக்குத் தெரியாத நிலையில் உள்ளது. 36 வயதாகும் பிங்பிங் ஜூலை 1 இல் ஒரு சிறுவர்கள் வைத்திய சாலைக்குச் சென்ற பின்னரே காணாமற் போயுள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பிரசித்தமான Weibo என்ற சமூக வலைத் தளத்தில் இவருக்கு 63 மில்லியன் பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்