சமூக ஊடகம்

13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.

The World's Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசினை வென்று சாதனை படைத்திருக்கிறார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்.

லிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றவர்.

லிடியன் நாதஸ்வரம் என்ற இளைய இசை மேதை இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷனின் வாரிசு, மற்றும் இவரின் சகோதரி அமிர்தவர்ஷிணியும் வாத்திய வாசிப்பில் அசாத்தியத் திறன் கொண்டவர். தன் பிள்ளைகளை இசைக்காகவே அர்ப்பணித்து அவர்களின் பள்ளி வாழ்க்கை நேரத்தையும் அதற்காகவே முழுமையாக மாற்றிக் கொண்டதன் அறுவடையாக இந்த வெற்றி விளங்குகிறது.


லிடியன் நாதஸ்வரம் தமது குருவாக 118 வயது நிரம்பிய Madras Musical Association Choir இன் இசையமைப்பாளர் அகஸ்டின் பால் ஐக் கொண்டு தன் இசைத் திறனை மேம்படுத்தினார்.

லிடியனின் வெற்றியைப் பறை சாற்றும் காட்சி

நன்றி : செய்தியாக்கம்கானா பிரபா

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்