சமூக ஊடகம்
Typography

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்" என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு வந்து தந்தையிடம் இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும் எனச் சொன்னதாகக் குறிப்பிட்டான். தந்தை, பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார். அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், இதற்கு 5000 டாலர் தரமுடியும் என்றனர். தந்தை மீண்டும் இதனை அருங்காட்சியகம் ( museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப் பார் என்றார்.

அவ்வாறே அவன்  போய் கேட்டு விட்டு தந்தையிடம் வந்து, " நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர் " எனச் சொன்னார்கள் என்றான்.

தந்தை, மகனைப் பார்த்து, " மகனே! இதனையே உனது வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொள். சரியான இடமே உனது மதிப்பை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை யாரும் மதிக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை. மேலும் உனது மதிப்பை அறிந்தவர்களே உன்னை கண்ணியப்படுத்துவார்கள்!அவர்களே உன்னுடைய உன்னத நண்பர்கள். அவர்களை இனமறிந்து அவர்களோடு வாழ்க்கையில் பயணம்செய். அப்போது வாழ்க்கை இன்பமயமாகும்" என்றார்.

நன்றி : Manivannan Subramaniam

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்