சமூக ஊடகம்

திரையரங்குகளுக்கு மாற்றாக இன்று இணைய சினிமாவும் இணையத் தொடர்களும் மிகப்பெரிய சந்தையை உருவாக்கி விட்டன. தற்போது முழு நீளத் திரைப்படங்கள் இணைய சினிமாவாக எடுக்கப்பட்டு நேரடியாக இணையத்தில் வெளியாகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறையப்போகிறது.

இதுவொருபுறம் இருக்க, இணைய சினிமாவுக்கு எந்தவித தணிக்கைக் கட்டுபாடும் இல்லாத சுதந்திர வெளியாக இருப்பதால், தமிழில் வெளியான இனையத் தொடர்கள், சினிமாக்களில் அநியாயத்துக்கும் வன்முரை மற்றும் பாலியல் காட்சிகளை மலிந்து கிடக்கின்றன.

ஆட்டோ சங்கர் தொடங்கி லஸ்ட் ஸ்டோரீஸ் வரை இதற்கு நூற்றுக்கணக்கில் உதாரணம் சொல்லலாம். இதுதவிர, பிரபலங்களைப் பற்றி எவ்வித ஆய்வும் இல்லாமல் தாருமாறாக தொடர்கள் வரத் தொடங்கிவிட்டன. ஜெயலலிதா தொடரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். தலைவர்களின் கதை போலிப்பெயரில் எடுக்க மோடி அரசு ஒரு கடிவாளத்தை ரெடி செய்து கொண்டிருப்பது தனி சேதி.

இதனிடையே இன்ஸ்டாகிராம் உலகமெங்கும் கோடிக்கணக்கான பயனாளர்களை சம்பாதித்து வைத்திருக்கிறது. அப்பேர்பட்ட இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய இனையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் அதிரடித் திட்டத்தை சோதனை முறையில் கொண்டு வருகிறார்களாம்.

கிட்டத்தட்ட சின்னத்திரை விளம்பரத்துக்குண்டான ஒருநிமிட அவகாசத்தில் ஒரு நாவலை, சிறுகதையை , கவிதையை சொல்லும் வகையில் இன்ஸ்டாக்ராமில் அறிமுகமாக போகும் முதல் தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FIRSTS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் ரோஹன் ஷா அபூர்வா அரோரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சகலருக்கும் சிலிர்பூட்டும் பள்ளிப்பருவத்துக் காதல் குறித்தும், அதன் அருமை பெருமையான முதல் தருணங்கள் குறித்தும்தான் இந்தத் தொடர் பேச இருக்கிறது.

ஜனவரி 25-ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. புதியவர்களுக்கு புதிய தளம்.. அள்ளலாம் பணம்.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.