சமூக ஊடகம்
Typography

சமூக வலைத்தளங்கள் சமூகச் சீரழிவுக்கான தளங்களாகி வருகின்றன எனும் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அதேவேளை இதனை முறைப்படுவதற்கான செயற்திட்டங்களும், வடிவமைப்புக்களும் கூட நடைபெற்றே வருகின்றன.

இதேவேளை சமூக வலைத்தளங்களினால் பலருக்கு நம்பிக்கையூட்டவும், வளஞ்சேர்க்கவும் செய்கின்றன என்பது மறுப்பதற்கும் இல்லை. அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டல்தான் அன்மையில், அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான குவாடன் பெல்ஸின் வாழ்வில் நிகழ்ந்துள்ளது.

குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக, உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவான குரல்கள் எழுந்து வருகின்றன. உடல் வளர்ச்சியின்மை காரணமாக, பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை குவாடன் பெல்ஸ் தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனக் கூறியதை, அவனது தாய் காணொளியாகச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

இக் கானொளியை பார்வையிட்ட, சர்வதேச பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தமது அன்பினைத் தெரிவித்து வந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் ஆல்-ஸ்டார் ரக்பி அணி, துன்பத்துக்குள்ளான அச் சிறுவனுக்கு நம்பிக்கை தரும் வகையில், மைதானத்திற்கு அழைத்து வந்து சிறப்பித்துள்ளது. இதனை பார்த்த பார்வையாளர்கள் பெரும் சந்தோஷத்துடன் வரவேற்றமை எல்லோர் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்த, குவாடன் பெல்ஸின் முகத்தில் பிரகாசமான புன்னகை. இக் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்