சமூக ஊடகம்
Typography

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ்தாக்கம் உச்சம் கொண்டுள்ள நிலையில், குறிப்பாக இத்தாலியில் அதன் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்மொழியிலான ஆலோசனைகளை, உதவிகளை தொலைபேசி வழியாக வழங்குவதற்கான ஒருங்கமைப்பினை இத்தாலி, சுவிஸ், வாழ் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். " நீங்கள் தனியாக இல்லை. தயங்காமல் எங்களுடன் தொடல்பு கொள்ளுங்கள் " எனும் ஆறுதல் வார்த்தைகளுடன், அவர்கள் உதவித் தகவல் மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

முதல் தடவையாக ஒரு இக்கட்டான நிலைமையில் வாழும் நாம், இது ஒரு தற்காலிக நிபந்தனை என்பதை நினைவில் கொண்டும், இத்தாலி அரசாங்கம் விடுத்திருக்கும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே இதிலிருந்து விரைவில் மீண்டுவர முடியும் என்பதும் நினைவில் கொள்வது முக்கியம்.

இவ் அவசரக்கால நிலைமையால் நாம் குழப்பங்களுக்குள் உள்ளாகலாம், அதனால் எம்மை கேட்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அறிவுறுத்தக்கூடிய ஒருவருடன் நம் மனநிலையைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகலாம். இதற்காகவும் தான் நாங்கள் உங்களுக்காக பணியாற்றி வருகின்றோம். எங்கள் வலைத்தளங்களில் நாங்கள் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி எண்கள் ஊடாக எங்களை தொடர்புக் கொள்ள தயங்க வேண்டாம்!

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்.

இத்தாலி நாட்டில் தமிழில் உதவி பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களும், நேரங்களும்:

(10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911

இதேபோன்று சுவிற்சர்லாந்திலும் தமிழ இளையோர், தமிழில் தொடர்பு கொள்வதற்கான இலக்கங்களை அறியத் தந்திருக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் தொடர்புகொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கங்கள் :

ஜேர்மன் - தமிழ் மொழியில் தொடர்பு கொள்ள: 078 704 76 25 அல்லது 079 234 68 27

பிரெஞ் - தமிழ் மொழியில் தொடர்பு கொள்ள : 079 358 71 57 அல்லது 078 721 75 48

மேற்குறித்த இலக்கங்களில் மாநில மொழிவாரியான இலகங்களை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

இத்தாலி - தமிழ் மொழியில் தொடர்பு கொள்ள : 079 223 93 37 அல்லது 078 632 01 86

ஆபத்தான அல்லது பதற்றமான வேளைகளில், தாய்மொழியிலான உரையாடல்கள் ஆறுதலாக இருக்கும். அதனை காலம் உணர்ந்து செய்ய வந்திருக்கும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்