சமூக ஊடகம்
Typography

சுவிற்சர்லாந்தில் நாளை மார்ச் 20 வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியினை அனைவரும் முக்கியமான தருணமாக நினைவில் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்செயற்பாடுகளில், முன்னின்று அயராது போராடுபவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஊழியர்கள். தினமும் பலமணிநேரங்கள் தங்களது அயராத சேவையின் மூலம் நோயுற்றவர்களுக்கு  உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவுகிறார்கள், மேலும் இந்த கடினமான தருணத்தை சிறந்த முறையில் சமாளிப்தற்காக கடுமையாக உழைக்கின்றார்கள்.

அவர்களுக்கு , மரியாதை செய்வதற்காக, உற்சாகமூட்டுவதற்காக, சமீபத்திய நாட்களில் பல இடங்களில் வார இறுதியில் பால்கனிகளில் நின்று கைதட்டிப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். நாளை, மார்ச் 20 வெள்ளிக்கிழமை, சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பிரதேசத்திலும், NZZ, CH Media, SRG, Ringier, Tamedia போன்ற ஊடகங்கள், நிறுவனங்கள், இந் நிகழ்வினை ஒருங்கமைக்கின்றன.

நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உங்கள் பால்கனிகளில், ஜன்னல்களில், தெருவில். நாளை நன்பகல் 12.30 மணிக்கு ஒரு நிமிடம் உங்கள் கைகளைத் தட்டி, நன்றி சொல்லி  ஆதரவினைத் தெரிவியுங்கள். இந்தச் செயற்பாட்டில் நாம் எவ்வளவு அதிகமாக இருக்கிறோம் என்பதும், சரியாக நன்பகல் 12.30 மணி என்பதும், இதை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்துவதும்  முக்கியமானவை.

கோவிட்- 19 கோரோனா வைரஸ் தெரிஞ்சதை சொல்லியிருக்கிறம். கேட்பதும், யோசிப்பதும், நடப்பதும் அவரவரைப் பொறுத்தது. திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! இணைப்பில் அழுத்தி விபரம் அறிக 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்