சமூக ஊடகம்

இருவாரங்கள் முன்பு அலறியது அலைபேசி. யாரென்று பார்த்தால் ஊடகத்துறையில் பணியாற்றும் தம்பி ஜெரால்ட்.

”அண்ணே கோவையைச் சேர்ந்த ஒரு அப்பாவி லாரி ஓட்டுநரை ஆந்திரா போலீஸ் தூக்கீட்டுப் போய் சித்ரவதை செய்யறாங்கண்ணே…

என்ன சொல்லியும் கேட்காம அரிசி கடத்துனார்ன்னு சொல்லி பொய் வழக்குப் போட்டு ஆந்திரா ஜெயில்ல உள்ளே தள்ளீட்டாங்க. பெயிலுக்குப் போராடிப் பார்த்தும் பிணை கிடக்கலண்ணே.நீங்க நம்ம சத்யராஜ் தோழர் கிட்ட சொல்லி எப்படியாவது அவரை மீட்க வழி பண்ணுங்க என்றார்.

தவறுதலாக பொய் வழக்கில் கோர்க்கப்பட்ட ஓட்டுநர் ரவிச்சந்திரன் குறித்தும் அவரது மனைவி வாணீஸ்வரி கதறலோடு அளித்த பேட்டியையும் எனக்கு உடனடியாக அனுப்பி வைத்தார் தம்பி ஜெரால்ட்.
சிம்பிளிசிட்டி என்கிற வலைத்தளத்தில் (simplicity.in) இது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதே தகவலை தோழர் சத்யராஜுக்கும் அனுப்பி “நான் பாமரன் அண்ணனின் தம்பிகளில் ஒருவன். இது குறித்து ஆந்திராவிலுள்ள நடிகை ரோஜா மேடத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவரை மீட்க உதவுங்கள்” என்று செய்தி அனுப்ப….

அடுத்த சில நிமிடங்களில் தொடர்பு கொண்ட தோழர் சத்யராஜ் ”இதன் நம்பகத்தன்மையை கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் தோழர்..நாம் மேற்கொண்டு வேலைகளைப் பார்ப்போம்” என்று கூறுகிறார்.

மறுநிமிடமே…
நெருங்கிய ஊடக நண்பர்களிடம் விசாரித்துவிட்டு..அறச்சீற்றம் கொண்ட ஊடகவியலாளன் எமது அவினாசியால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பன் தான் தம்பி ஜெரால்ட் என்றும்,விசாரித்த அளவில் அந்த ஓட்டுநர் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும் தோழர் சத்யராஜுக்கு தகவலைச் சொல்கிறேன்.

அடுத்து நடந்ததெல்லாம் விறு விறுப்பின் உச்சம்.
உடனடியாக சத்யராஜ் அவர்கள் இயக்குநரும் நடிகை ரோஜாவின் இணையருமான ஆர்.கே. செல்வமணியுடன் இத்தகவலைச் சொல்ல….
அடுத்த சில நிமிடங்களில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனின் காதல் மனைவி வாணீஸ்வரியிடம் விசாரித்துவிட்டு தனது இணையரும் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் தொழிற்துறை உள்கட்டுமான வாரியத்தின் சேர்மனாகவும் இருக்கிற நடிகை ரோஜாவிடம் சகல செய்திகளையும் தெரிவிக்கிறார்.

விளைவு ?:

தனது கவனத்துக்கு இந்தத் தகவல் வந்ததும் துரித நடவடிக்கையில் இறங்குகிறார் நடிகை ரோஜா .சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவினது உத்தரவின் பேரில் அவரது உதவியாளர் இது சம்பந்தப்பட்ட சகலரிடமும் ஆந்திர போலீஸ் தவறுதலாக கைது செய்துவிட்ட சம்பவத்தை எடுத்துக் கூறி பிணையில் வெளிவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

அதன் விளைவு :

ஒன்றரை மாதமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை அனுபவித்த இரண்டுமுறையும் பிணை மறுக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் பெயிலில் விடுவிக்கப்படுகிறார்.

அந்த அப்பாவி ஓட்டுநர் விடுதலையாகி தற்போது தனது தாய் மண்ணான தமிழகத்தில் மீண்டும் தன் கால்களைப் பதித்திருக்கிறார் இப்படி சகலரது முயற்சியின் விளைவாக அவர் விடுதலை ஆகியிருந்தாலும்,
தாமதிக்காது இதனை உடனே அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்ற சத்யராஜ் தோழரும், அவரது தகவல் கிடைத்த மறுநிமிடமே தோழியர் ரோஜா அவர்களிடம் எடுத்துக்கூறிய எமது அன்பிற்குரிய நண்பர் ஆர்.கே. செல்வமணி அவர்களும், தனது எண்ணற்ற பணிகளுக்கு இடையேயும் அந்த அப்பாவி ஓட்டுநரின் அவலம் தீர்க்க மின்னலெனப் செயல்பட்டு சிறையில் இருந்து விடுவிக்க பேருதவி புரிந்த மரியாதைக்குரிய ரோஜா அவர்களும், என்றென்றும் எமது நன்றிக்குரியவர்கள்.

தொடரட்டும் உங்கள் மனித நேயப் பணிகள்.
மனம் நிறைந்த நன்றிகளோடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும்,

உங்கள்,
பாமரன்.

இது தமிழக எழுத்தாளர் பாமரனின் முகநூல் பதிவு

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்