சமூக ஊடகம்

சுவிற்சர்லாந்தின் பல்வேறு ஊடகங்கள் இணைந்து இன்று சனிக்கிழமை நன்பகல் 12 மணிமுதல் நாளை ஞாயிறு பகல் 1.00 மணிவரையிலான 24 மணிநேரத்திற்கு "எல்லாம் நன்றாகும்" ( alleswirdgut, tout ira bien, andra tutto bene) என்ற தலைப்பில் தொடர் இசைநிகழ்ச்சியொன்றினை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்கின்றன.

இன்று நன்பகலில் ஆரம்பமாகியுள்ள இந்நிகழ்ச்சியின் நோக்கம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக வீடுகளில் இருக்கும் மக்களை உற்சாகப்படுத்துவதே . 24 மணி நேரமும் இடைவிடாது நீடிக்கும் இந்த நேரடி ஒளிபரப்பு இசைநிகழ்ச்சியினை, எஸ்.ஆர்.எஃப் நிலையங்கள் (எஸ்.ஆர்.எஃப் 3, எஸ்.ஆர்.எஃப் இரண்டு) மற்றும் தனியார் சேனல்கள் (ரேடியோ 24, ரேடியோ ஆர்கோவியா, ரேடியோ பிலடஸ், ரேடியோ எஃப்.எம் 1 மற்றும் ரேடியோ 32 மற்றும் டிவி சேனல் டிவி 24) ஆகியன ஒளிபரப்புச் செய்கின்றன. சுவிற்சர்லாந்தின் ரொமான்ஸ், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு பேசும் மாநிலங்களில், இந்நிகழ்ச்சியின் பங்காளர்களான , ஆர்.டி.ஆர், ஆர்.எஸ்.ஐ மற்றும் ஆர்.டி.எஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புச் செய்கின்றன.

www.alleswirdgut.live என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்ச்சி முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. படம் மற்றும் ஒலியுடன் கூடிய ஒளிபரப்பு சமிக்ஞை ஒவ்வொரு சுவிஸ் ஊடக வழங்குநருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. பின்வரும் தனியார் ஒளிபரப்பாளர்களும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறார்கள்

பின்வரும் தளங்களிலும் இந்த ஒளிபரப்பினைக் காணலாம் .

Blick TV
TV24
TV Südostschweiz
Radio32
Radio24
Radio Argovia
Radio FM1
Radio Pilatus

" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் !

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான 101 வயது நபர் நலமுடன் தனது வீடு திரும்பினார் !

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.