சமூக ஊடகம்

" நாரயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியேல்ல.." என்பது போல " இந்த பேக் நியூஸ் தொல்லை தாங்க முடியேல்லபப்பா" என்று புலம்ப வைக்கிறார்கள் சமூக வலைத்தளத்தில். ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒரு செய்தியைப் பெற்றுக்கொண்டால் அந்தச் செய்தியின் உண்மை குறித்த குறுக்கு விசாரணைகளின் பின்னரே அதனை நிறுவனத் தகவல் ஆக்க முடியும். அந்தச் செய்தி தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை நிறுவனம் சந்திக்க வேண்டியிருக்கும்.

சமூக வலைதளங்களுக்கு அந்த விதிமுறைகள் எதுவும் இப்போதைக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் தங்களின் பார்வைக்குத் தெரிவதையெல்லாவற்றுக்கும் கதைசொல்லிப் பகிர்கின்றார்கள். இதுவே சமூக வலைத்தளங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்து வருகிறது.

அன்மையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் அதிகரித்து இழப்புக்களும் அதிகரித்துள்ள நிறையில், இத்தாலி குறித்த தவறான கற்பிதங்களுடன் பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பலராலும் பகிரப்பட் ஒரு படம் இத்தாலியின் தெருக்களில் தேடுவாரற்றுக் கிடக்கும் பணத்தின் படங்கள்.

உண்மையில் இது இத்தாலியின் தெருக்களுமல்ல. வீசிக் கிடப்பது இத்தாலிப் பணங்களுமல்ல. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த படங்கள் வெனிசுலாவில் மார்ச் 2019 இல் எடுக்கப்பட்டதற்கான செய்தி ஆதாரங்கள் ஏற்கனவே இணையத்தில் உண்டு.

தெருக்களில் கிடந்த நாணயம் வெனிசுலாவின் பழைய நாணயமான பொலிவர் ஃபியூர்டே ஆகும், 2018 ஆகஸ்டில் மாற்றப்பட்ட, வெனிசுலாவின் புதிய வடிவிலான நாணயமான பொலிவார் சோபெரானோ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின், வெனிசுலா மக்கள் தங்களின் பயனற்ற பழைய பணத்தாள்களை வீதிகளில் வீசி எறிந்த படங்கள் அவை.

வெனிசுலாவில் மக்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடித்து, பின்னர் அது பயனற்றது என்பதைக் காட்ட பணத்தை எரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பல ஊடகவியலாளர்கள் இதே தகவலுடன் அப் படங்களை அப்போதே ட்வீட் செய்திருந்தனர்.

சமூகவலைத்தளங்களின் இவ்வாறான  தவறுகள் கண்டுபிடிக்க முடியாதவை என்றே பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் பகிரப்படும் அனைத்துத் தகவல்களும், பகிர்ந்த நிமிட நேரத்துக்குள் தகவற் சேமிப்பாக பதிந்துவிடும். அவற்றை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் மிக இலகுவாக் கண்டுபிடித்து விடலாம்.

இத்தாலியோடு தொடர்புபடுத்திய இந்தச் செய்தி எவ்வாறு சமூகவலைத்தளங்களில் வைரலாகியது என்பதனை " இந்தியாரூடே" யின் செய்தி விசாரனைப் பிரிவு கண்டறிந்துள்ளது.

பேஸ்புக் பயனர் "மனிஷ் தவான்" என்பவர்தான் முதலில் அந்தப் படங்களை பகிர்ந்துகொண்டு "இத்தாலியர்கள் தங்கள் பணத்தை தெருக்களில் எறிந்தனர். இப்போது அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் ..." இந்தியில் ஒரு தலைப்பை எழுதியுள்ளார். ( இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை படத்தை இங்கே காணலாம்).

இணையத்தில் இது தொடர்பான விபரங்கள் இருக்கின்ற போதிலும் எம்மவர்களும் எந்தவித சமூக அக்கறையுமின்றி, இந்தப் படங்களைத் தவறாகப் பகிர்ந்து வருகின்றார்கள். இத்தாலியின் தற்போதைய பாவனைப் பணம் ஈரோவாகும். படங்களில் இருக்கும் பணத்தாள்கள் அவையல்ல. இவையெதையும் கவனிக்காது பகிர்வது தவறானது. எப்போதும் இவை தவிர்க்கபட வேண்டியவையாயினும் நெருக்கடி மிகுந்த காலம் ஒன்றில் இவ்வாறான பகிர்வுகள் கண்டிப்பாகத் தவிர்க்கபட வேண்டியவை. இவ்வாறான பதிவுகள் துன்பத்திலிருக்கும் மக்களையும் ஒரு தேசத்தையும் அவமதிப்பதாகும்.

இச்செய்தி குறித்து இந்தியாரூடேயில் எழுதப்பட்டதைக் காண் இணைப்பில் அழுத்துங்கள்.

ஒராண்டுக்கு முன் 2019 மார் 09 ல் "ப்ளும்பேர்க் பிஸ்னெஸ்" வீக் வெனிசுலாவில் நடந்தது குறித்து எழுதிய செய்தி காண இங்கே அழுத்துங்கள்.

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்