சமூக ஊடகம்

அந்த நேரத்தில் என்னைப் பிடித்திருந்த ஒரு நோயின் பெயரைச் சொன்னேன். கூடவே ஒரு துணை நோயையும் குறிப்பிட்டேன். " உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு நாங்க முடிவு செஞ்சிக்கிடுறோம். இப்ப உங்களுக்கு என்ன செய்யுதுன்னு மட்டும் சொல்லுங்க” என்றார் அவர்.

ஹோமியோபதி மருத்துவத்துடன் எனக்கு இப்படியாகத்தான் அறிமுகம் அமைந்தது. என்னிடம் இப்படிச் சொன்னவர் மதுரையில் முன்னணி ஹோமியோபதி மருத்துவர் தா.சா. ராசாமணி. பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்திக்க முடிந்தது. சமூக நோய்களுக்கான சிசிக்சை பற்றியும் அந்த அரங்குகளில் பேசினார் ராசாமணி.

பின்னர் தோல் பாதிப்பு ஒன்று (குறிப்பாகக் கைவிரல்களில்) ஏற்பட்டபோது, எல்ஐசி பணியிலிருந்து ஓய்வு பெற்று, இயக்கத்தினருக்கு உதவுவதற்கென்றே ஹோமியோபதி பயின்றவரான தோழர் ஆர். கிருஷ்ணன் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். முந்தைய சில மருத்துவங்களைப் போல அல்லாமல் விரைவில் குணமடைந்து, விரல்களை மறைக்க எப்போதும் பேன்ட் பாக்கெட்டுகளில் ஸ்டைலாகச் செருகிவைத்திருந்த கைகளை விடுவித்தேன். சிகிச்சை மட்டுமல்லாமல் இந்த மருத்துவம் பற்றிய பல தகவல்களை கிருஷ்ணனிடமிருந்து பெற்றேன்.

செவ்வாப்பேட்டை வந்தபின், சென்னைக்கு ரயிலில் வரும் வழியில் கொரட்டூர் மருத்துவர் கே.எஸ். சீனிவாசன் தொடர்பு கிடைத்தது. உலக அளவிலான ஹோமியோபதி மாநாடுகளில் அவர் ஒரு முக்கியமான பங்கேற்பாளர். கடுமையான பல நோய்த் தாக்குதல்களை அவரது சிகிச்சை முறியடித்து என்னை இயல்பாகச் செயல்பட வைத்தன. அவருடைய துணை மருத்துவர் சிவராம் அளித்த ஆலோசனைகளும் எனக்குத் துணை செய்தன. மருத்துவம் தொடர்பான பேச்சுகள் முடிந்த பிறகு அரை மணி நேரமாவது அரசியல் பேசாமல் அனுப்ப மாட்டார் சீனிவாசன். கம்யூனிஸ்ட்டுகளைக் கடுமையாக விமர்சிப்பார், அதில் “இப்படியெல்லாம் இருந்தீங்கன்னா எப்படி இங்கே பெரிய சக்தியா வளர்வீங்க,” என்ற அக்கறை இருக்கும்.

சென்னையிலேயே குடியேறிய பின் கிடைத்ததுதான் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் தோழமை. சமூக அக்கறையோடு இணைந்த ஆளுமை. அறிவியலும் மார்க்சியமும் ஹோமியோபதி அணுகுமுறையும் இணைந்திருப்பதை அவரது பேச்சுகளிலிருந்து உணர முடிந்தது. ஹோமியோபதி மருத்துவம் பற்றி மக்களிடையே பல தவறான கருத்துகள் பரவியிருப்பதற்குக் காரணம் ஹோமியோபதி மருத்துவர்களேதான் என்று சொல்லும் அவர், ஒருநாள் தீக்கதிர் அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களோடு உரையாடியதும், சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததும் மறக்க முடியாத அனுபவம். தொழில்சார் வறட்டுப் பிடிவாதம் இல்லாதவராக அவர் எனது இதயம் தொடர்பான சிகிச்சைக்கு அலோபதி மருத்துவரைக் கலந்தாலோசிக்கப் பரிந்துரைத்தார். “மருத்துவர்களின் நோக்கம் நோயாளிகளை நோயிலிருந்து விடுவிப்பதுதான்,” என்ற கொள்கையோடு பி.வி.வி., அவரது இணையர் மருத்துவர் ஜெகதா இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.

‘அப்ரோச்’ அமைப்பினர் நடத்திய ஹோமியோபதி முகாம்களில் கலந்துகொண்டதும் புதிய புரிதல்களுக்கு வழி செய்தது. “நோய்க்கு மருந்தல்ல, நோயாளிக்கே மருந்து” என்று இயங்கிவரும் இவர்களைப் போன்ற சிகிச்சையாளர்கள் அனைவருக்கும், அவர்களிடம் சிகிச்சை பெறுகிற அனைவருக்கும் ஹோமியோபதி நாள் வாழ்த்துகள்.


நன்றி: குமரேசன், மூத்த இதழியலாளர், சென்னை.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.