சமூக ஊடகம்

பிரபாகரன் பெயர் அவமதிப்ப தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாற்றுப் பார்வையாகவும்,  மறைக்கப்படும் சில உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது ஜெ.பி தென்பாதியான்  சமூகவலைத்தளக் குறிப்புக்கள். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கு மீளடபதிவு செய்கின்றோம்.

பிரபாகரனை...! அவன் என் தம்பி, அவன் என் அண்ணன் என்றெல்லாம் கூவி கூவி பிழைத்த, பிழைத்துக்கொண்டிருக்கும் சிலர் தற்போது பிரபாகரனுக்காய், நடிகர் துல்கர் சல்மானை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் வன்மங்களை கக்கி வருகின்றனர். பிரபாகரன் இருந்த போதும், இப்போதும் எதுவுமே செய்யாத இவர்கள் பொங்கி எழாமல் இருந்திருந்தால் அதுதான் ஆச்சர்யம். தமிழினத்தின் தலைவா உன் முகம் கண்டால் பசி மறைகிறது - பயம் பயப்படுகிறது - நாங்கள் வரலாறு படைக்க உன் வரலாறு ஒன்றே போதும் என்றெல்லாம் 2009 காலகட்டத்தில் சீற்றமுடன் சில்லறைகளை சிதறவிட்டவர்களில் நானும் ஒருவன்.

அப்போதைய பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர் பிரச்சாரம் செய்ய சென்ற எங்கள் அமைப்பினர் அடி உதை வாங்கி, உணவுக்கு வழியின்றி, தங்க இடமின்றி சாலையோரங்களில் தங்கி, நாங்கள் பட்ட இன்னல்கள் யாவும் எனக்கும், என்போன்ற சிலருக்கும் மறக்கவே முடியாத வாழ்நாள் துயர சம்பவங்கள். அப்போதைய ஈழப் புரட்சியாளர்கள் என் போன்றோர்கள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு வெறும் பேச்சிலேயே வசியப்படுத்தினார்கள். அந்த பேச்சுகளின் போதையில் நாங்களும் கண்மூடித்தனமாக அவர்களை அவ்வளவு நம்பினோம். பிறகு என்ன வழக்கம் போல ரிவீட்டுதான். அதே காலகட்டத்தில் மத்திய அமைச்சரின் பையனிடம் துட்டு வாங்கிகொண்டு, அவர்களை நம்பி வந்தவர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேசனிலயே விட்டுவிட்டு போன போராளிகள் எல்லாம் இன்று பிரபாகரனுக்காய் பொங்கி எழுகிறார்கள். பொதுவெளியில் எங்களை பிரச்சாரத்துக்கு வரவழைத்து விட்டு, இரவோடு இரவாக வீட்டிற்கு அழைத்து என் தொகுதியில் பிரபாகரனை பற்றி யாரும் வாய் திறக்காதீர்கள் என்று சொன்ன எம்.பி யும் இதே தமிழ்நாட்டில் உண்டு. இவர்கள் எல்லோரும் எதையோ சரி செய்துகொள்வதற்காக இப்படி கூவி திரிகிறார்கள் வன்மத்தோடு. ஒருவேளை அவர்களது குற்ற உணர்வு கும்மாங்குத்து குத்தும் போல.

அவதானமாக இருப்போம் ...!

களப்பணி செய்பவர்கள் ஒருபோதும் கூவி திரியமாட்டார்கள் என்பதற்கு சான்றாக, உண்மையாகவே பிரபாகரனுக்கு உதவிய சிலர் அமைதியாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டு சூழலில் புரட்சி செய்யவும், அரசியல் பேசவும் தரமான HD புகைப்படம் போதுமென ஒரு சில கூட்டங்கள் திடமாய் நம்புகிறது. இந்த போக்கு சாதி - மத வெறிக்கும், சாதி - மதப் பற்றுக்கும் மேலானது. மக்களுக்காக உழைத்தவர்கள் என்று நீங்கள் சொல்லும் தலைவர்களை புனிதப்படுத்துவது, தனி சமூகமாய் கொண்டாடுவது, விமர்சிக்க அனுமதிக்ககாதது, சுய பரிசோதனைக்கு முன்வராமல் பழைய பஞ்சாங்களுக்கே முட்டுக்கொடுப்பது போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளை தயவுசெய்து கைவிடுங்கள். உங்கள் செயல்பாடுகள் யாவும் நீங்கள் கொண்டாடும் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. இங்கு எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. ஊர் வம்பு இழுப்பதை விட்டு அவர்களது கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள். அதை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

இயக்குனர் அனூப் இயக்கத்தில் வரனே அவஷ்யமுண்டு திரைப்படத்தில் பி.ஜே.பி யின் ராஜ்யசபா எம்பி சுரேஷ்கோபி பேசி நடித்த ஒரு வசனத்திற்காக துல்கரை விமர்சிக்கும் உங்களது தொலைநோக்கு பார்வையுள்ள இனப்பற்று பலமாய் பல்லிளிக்கிறது. நாகரீகம் மறுத்து வன்மம் கக்கும் உங்களை எல்லாம் மதித்து மன்னிப்புக்கோரி தன்னை மனிதராக நிறுவி கொண்டுள்ளார் துல்கர். அறமற்றவர்களுக்காய் மன்னிப்பு கோரிய துல்கருக்கு எனது கண்டனங்கள்.

ஒரு படைப்பில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், சென்சார் போர்டு, தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர், நடிகை, துணை நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் படைப்பில் பங்குபெறும் இதர கலைஞர்கள் என்று இவர்களில் யாரை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள், எப்போது யாருக்கு எதிராக கொடி பிடிப்பீர்கள் என்பதை தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள். அப்படியே மறவாமல் இந்தந்த பெயர்களை பயன்படுத்த தடை, இந்தந்த பெயர்களை பயன்படுத்த அனுமதி, இப்படியான காட்சிகளை நாங்கள் எதிர்ப்போம், அப்படியான காட்சிகளை நாங்கள் ஏற்போம் என்று சென்சார் போர்ட் நிர்வாகத்திற்கு கட்டளையிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவிடுங்கள்.

‘பிரபாகரன்’ பெயர் சர்சை: சீமானின் எதிர்பார்ப்பு !

ஏனென்றால் ஒரு படைப்பில் இயக்குநரை நோண்டுகிறீர்கள் , இன்னொரு படைப்பில் நடிகர், நடிகையை சீண்டுகிறீர்கள். அரிதினும் அரிதாக குறிப்பிட்ட தயாரிப்பளர்களை தக்க சமயம் பார்த்து எதிர்க்கிறீர்கள். தயவுசெய்து இதுக்கு இன்னாரையும், இதுக்கு இன்னாரையும், எதுமே இல்லாவிடிலும் அதுக்கு இன்னாரையும் நோண்டுவோம் அல்லது சீண்டுவோம் என்று உங்கள் அவமதிப்பு அட்டவனையை பொதுமக்கள் முன்னிலையில் பிரகடனப்படுத்துங்கள். ஏனென்றால் உண்மையாகவே உங்களுக்கெல்லாம் கருத்து தான் பிரச்சினையா ? பிரபலங்கள் பிரச்சினையா ? அல்லது பிரபலங்களின் பின்புலம் பிரச்சினையா ? என்று இங்கு பெருங்குழப்பம் நீடிக்கிறது.

தனக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது மட்டும் தமிழர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று கர்ஜித்துவிட்டு, தமிழ்நாட்டில் நடக்கும் எந்த அநீதிகளுக்கும் ஒரேயொரு குரல் கொடுக்கக்கூட நேரமின்றி புத்தகங்கள் வாசித்து தள்ளும் மாமேதைகளை விட, பிரபாகரன் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானபோது வீரவணக்கம் கூவி, மெழுகுவர்த்தி ஏந்திய போராளிகளை விட, தமிழர்களின் பல துன்பங்களில் பங்கெடுக்கும் மம்முட்டியின் மகனாகிய, நடிகர் துல்கர் சல்மான் ஆபத்தானவர் இல்லை என்று நம்புகிறேன்.

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, அவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் பணி என்று சொன்ன பிரபாகரனை நேசிப்பவர்கள், அவரை உள்வாங்கியவர்கள், துல்கரின் தந்தை மம்முட்டியின் பெயரை நாய்களுக்கு வைப்போம் என்று ஒருபோதும் கூவ மாட்டார்கள். எது எப்படியோ நீ இருந்தபோதும், இல்லாத இப்போதும் எதுவுமே செய்யாத இவர்களின் பசியாற கஞ்சி ஊற்றும் நீ நீடுழி வாழ்க பிரபாகரா.

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை : சூர்யா

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது, பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் பங்காற்றிய நாய்க்குட்டியின் பெயர் சுப்ரமணி. திரவுபதி படத்தில் நாயகன் பெயர் பிரபாகரன் என்ற வரலாற்றுப் பதிவுகள் வருவதை காண்கிறேன். கண்டிப்பாக அந்த சுப்ரமணி நாய் முப்பாட்டன் முருகனாக இருக்காது, திரவுபதி பிரபாகரன் நாங்கள் கொண்டாடும் பிரபாகரனாக இருக்காது என்று நான் நம்புகிறேன். நீங்கள்..?

ஜெபி.தென்பாதியான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.