சமூக ஊடகம்

கடந்த வருட இறுதியில் இருந்து இம்மாத நடுப்பகுதி வரையில், இந்தியாவில் நடந்த சில சம்பவங்களின் நினைவக் குறிப்புக்கள் இவை. இதனைக் குறித்து வைத்துக் கொள்வதாலோ அல்லது குறிப்பிட்டுச் சொல்வதாலோ மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.

ஆனாலும் இந்த நாட்களை மக்கள் மறக்காதிருக்க கூடும். இது ஒரு சாமான்ய இந்தியனின் நாட்குறிப்பு மட்டுமே...

8.12.19- சீனாவில் கொரோனா ஆரம்பம் ஆனதாக பத்திரிக்கை செய்தி

21.12.19- சீனா அதிகாரபூர்வ அறிவிப்பு

15.1.20- உலக அளவில் கொரோனா பரவ ஆரம்பித்த தகவல்

18.1.20- உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை அறிவிப்பு

30.1.20- கேரளாவில் முதல் பாதிப்பு

7.2.20- ரஷ்யா, வட கொரியா தனது எல்லைகளை மூடின

12.2.20- இந்தியாவில் கொரோனா பரவி விட்டதாக ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை

13.2.20- ராகுல் காந்தி அறிக்கை கோமாளித்தனம் என மத்திய அரசு மறுப்பு

16.2.20- இந்து மகா சபையின் 5000 பேர் கலந்து கொண்ட கோமுத்ரா மாநாடு நடந்தது

21.2.20- ஜக்கி வாசு தேவ், கோவையில், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட சிவராத்திரி இரவு பூஜை நடத்தினார். வெளி நாட்டவர்களும் பங்கேற்பு.

23.2.20- ஒரு வாரமாக டில்லியில் வன்முறை கூட்டங்கள்

24,25.2.20- டிரம்ப் திருவிழா. ஒரு லட்சம் பேர் பங்கேற்ற விழா

8.3.20- ஜனாதிபதி மாளிகையில் 500 மகளிர் கலந்து கொண்ட மகளிர்தின விழா கொண்டாட்டம்

10.3.20- குஜராத், அகமதாபாத்,கல்பூரில் 40000 பேர் கலந்து கொண்ட ஹோலி பண்டிகை திருவிழா.

11.3.20- WHO declared corona a “Pandemic”

12.3.20- 50000 பேர் கலந்து கொண்ட சீக்கியர் மத திருவிழா.

13.3.20- மத்திய அரசு Corona is not a health emergency என அறிவிப்பு

13,14,15.3.20- டில்லியில் தப்லிக் மாநாடு

15.3.20- விளம்பரம் இல்லாமல் மத்திய பிரதேச அரசு கவிழ்ப்பு

15.3.20- கர்நாடக பிஜேபி எம்எல்ஏ மகள் திருமண நிகழ்ச்சியில் எடியூரப்பா 5000 பேருடன் பங்கேற்பு

16.3.20- London return கனிகாகபூர் நிகழ்ச்சியில் பிஜேபி VIP க்கள் கலந்து கொண்டனர். 1000 பேர் பங்கேற்றதில் துஷ்யந்த்சிங் எம் பி கலந்து, பாராளுமன்றம் சென்ற நிகழ்வு பல பிரச்னைகளை உருவாக்கியது

17.3.20- திருப்பதியில் 40000 பேர்அடைத்து வைக்கப்பட்டு, தரிசனம் முடிந்ததும் வெளியேற்றப்பட்டனர்

19.3.20- social distance தேவை குறித்து, பிரதமர் முதன் முதலாக அறிவிப்பு

22.3.20- ஒரு நாள் ஊரடங்கு மற்றும் கைதட்டுதல் அறிவிப்பு

24.3.20- உ பி முதல்வர், 10000 பேர் கலந்து கொண்ட ராம ஜன்ம நவமி திருவிழா நடத்தினார்

25.3.20- வெளிநாடுகளுக்கு மருந்து பொருள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.

25.3.20- ஊரடங்கு 21 நாட்கள் தொடர மத்திய அரசு அறிவிப்பு.

4.4.20- டிரம்ப் மிரட்டலுக்குப்பின் , மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது.

5.4.20- விளக்கு ஏற்ற மத்திய அரசு அறிவிப்பு

13.4.20- மீண்டும் 19 நாட்கள், மே 3ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு உத்திரவு.

- இணையக் குறிப்புக்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.