சமூக ஊடகம்

ஜெயலலிதா இருக்கும்போதே தனது சினிமா தொழிலுக்கு கமல் பல பாதிப்புகளை சந்தித்தார். அவர் இறந்த பிறகோ இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்தார். இதனால் தன்னையும் மக்கள் நலனையும் உத்தேசித்து மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தார்.

அப்படி வந்தாலும் கமல் பேசும் மொழி புரியாமல் எங்கள் மண்டையைக் காய வைக்கிறது, கண்களைக் கட்டுகிறது என்று மக்கள் விமர்சனம் செய்தனர். அதை ஏற்ற கமல், முதல் கட்டமாக தனது ட்விட்டரில் புரியா மொழியிக் செய்து வந்த குறும்பதிவுகளை எளிமையான மொழிக்கு மாற்றினார்.

அப்படியும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் “கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என்றும், இந்தியாவில் அதை விதைப்பதில்லை” என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அதற்கு கமலும் தனது ட்விட்டர் மூலம் மிக எளிய மொழியில் பதில் தந்து அசத்தினார்.

அன்று முதல் மக்களுக்குப் புரியும் எளிய மொழியில்தான் தனது அரசியல் அறிக்கைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இன்று மண்டை குழம்பியவர் போல் மீண்டும் குழப்பாமன மொழியில் ட்வீட் செய்திருப்பது மக்களை மட்டுமல்ல; அவரது ரசிகர்கள், தொண்டர்களையும் மண்டை காய வைத்துள்ளது.

இன்று அவர் செய்திருக்கும் ட்விட்டர் பதிவில்;

“மக்களைக் காக்க மக்களே மருந்து உயிர் பயம் ஊரை அடக்கலாம் ; பாழும் கிருமி உமக்கும் வணங்காது, எவருக்கும் அடங்காது. எரிமலைக் குழம்பை தண்ணீர் தணிக்குமா ? இவ்வுலகை இன்று சூழ்ந்துள்ள தீப் பிழம்பு நம்மை விழுங்கும் முன் , மக்கள் அனைவரும் எண்ணம் கோர்த்து செயல்பட வேண்டும். யார் ஓதுவது எந்த வேதம் என கிருமிக்கும் தெரியாது. நமக்கும் தெரிய வேண்டாம் . நம்மைக் காக்க நாமே வேலி...மதமற்ற மார்க்கம் சாரா வேலி. கை கோர்ப்போம்!எண்ணம் கோர்ப்போம்! கட்டளையிட்டல்ல ... இதை வேண்டுகோளாய் ஏற்று அன்பு வளர்க்க.....” - என்று தெரிவித்துள்ளார்.

"ஸ்ஸ்ஷுஷூ கண்ணை கட்டுதே...  கமல் சார் நீங்களே கோணார் நோட்ஸ் போட்டுருங்க’ என்று அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.