சமூக ஊடகம்

கொரோனா வைரசுக்கு எதிரான செயற்பாடுகளில் பெரும் வல்லரசுகளே சிக்கித் திணறும் வேளையில், சத்தப்படாமல் சாதித்துக் காட்டியிருக்கும் சிறு நாடுகள் பலவுள்ளன. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும், நிலப்பரப்பிலும் மக்கள் தொகையில் இவ்வாறான நாடுகளுக்கு இணையாகக் கருதமுடியும். 

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான செயல்வடிவங்கள் குறித்துப் பலராலும் பாராட்டப் பெறுவது கேரள மாநிலம். ஆனால் அதனை விட மிகத் துல்லியமாகச் செயற்பட்டு, கொரோனாவிற்கு எதிர் கொண்டிருக்கும் மாநிலம் ஒடிசா.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சென்னையில் உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. அதேவேளை, கொரோனா தடுப்பு பணியின்போது இறக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவித்தார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். கொரோனாக் காலத்தில் ஒடிசாவின் சிறப்பான செயற்பாட்டினைத் தனது சமூக வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளார் திருப்பூர் ஜோதிஜி. அவருக்கான நன்றிகளுடன் அவரது பதிவினை இங்கே பகிர்கின்றோம். - 4TamilmediaTeam

இந்திய வரலாற்றில் மார்ச் 22 முதல் 40% க்கும் மேற்பட்ட இடங்களை லாக் டவுன் அமல்படுத்திய முதல் மாநிலம் ஒரிசா

ஏப்ரல் 14ல் லாக் டவுன் 2.0 ஐ ஆரம்பித்த முதல் மாநிலம் ஒரிசா

தொழில்முறை மருத்துவமனைகளால் நடத்தப்படும் கோவிட் மருத்துவமனைகளைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா.

தனது அனைத்து மாவட்டங்களிலும் COVID மருத்துவமனைகளை உருவாக்கிய முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்திற்கு வெளியில் இருந்து திரும்பியவர்களின் ஆன்லைன் பதிவைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வீட்டிலிருந்து வெளியே வர ஆன்லைன் பாஸ் வழங்கும் முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்தில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்னாலேயே, ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் கடல் துறைமுகங்களில் திறமையான, தேவையான கட்டுப்பாடுகள் கொண்டுவந்த மாநிலம் ஒரிசா.

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை சமூக கண்காணிப்பில் கொண்டு வந்த முதல் மாநிலம் ஒரிசா

பயண வரலாற்றை அறிவிக்க ரூ.15,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்கி, சுய அறிவிப்பை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிய ஒரே மாநிலம் ஒரிசா.

வெளியில் இருந்து வரும் மக்களுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் மற்றும் வாட்ஸ்அப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

டெலிமெடிசின் ஹெல்ப்லைனைத் தொடங்கிய ஒரே மாநிலம் ஒரிசா

தெருவில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு உணவளிக்க சிறப்பு நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் ஒரிசா. உலகில் வேறெங்கும் இந்த முயற்சி இல்லை என்கிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பித்த ஒரே மாநிலம் ஒரிசா

கோரா உடபட சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் ஒரிசா.

சில சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு செய்திகளை ஒடுக்கி, கொரோனோவின் மத்தியில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய மாநிலம் ஒரிசா

அனைத்து பஞ்சாயத்துகளிலும் வறியவர்களுக்கு சமைத்த உணவை வழங்கிய முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் அடுத்த மாநிலத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஹெல்ப்லைனைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

அவர்களுக்கு போதுமான உணவு, நீர், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முதல் மாநிலம் ஒரிசா

மூன்று மாதங்களுக்கு தேவையான ரேஷன் உணவுகள் ஒரே நாளில் முன்கூட்டியே வழங்கிய ஒரே மாநிலம் ஒரிசா

மகளிர் சுய உதவிக்குழுக்களை நேரடியாக தொற்றுநோய் நிர்வாகத்தில் ஈடுபடுத்தும் முதல் மாநிலம் ஒரிசா

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடும் ஒரே மாநிலம் ஒரிசா

விளைவு...

 01.05.2020 நிலவரப்படி ஒரிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 128.

இறந்தவர் 1. இதில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

கேரளாவிற்கு மேலாக, உலகத்தரத்தில் கொரோனாவை வீழ்த்திய மாநிலம் ஒரிசா.

ஒரிசா (ஒடிஷா) முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே. பாண்டியன், தமிழர் என்பது கூடுதல் தகவல்.

நன்றி: திருப்பூர் ஜோதிஜி

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.