சமூக ஊடகம்

இந்தியக் 'குடி'மக்கள் எல்லோர் பின்னாலும் ஒளிந்திருக்கக் கூடிய ஆயிரமாயிரம் கதைகளில், தான் நேரடியாகச் சந்திந்த மாந்தர்களின் கதையை தனது சமூகவலைப்பக்கத்தில் பகிரந்துள்ளார் Aishwarya Govindarajan அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்ந்துள்ளோம் - 4Tamilmedia Team

ஒருமுறை மீஞ்சூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ரயிலில் பழம் விற்றுக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேச்சு கொடுத்தபடி வந்தேன். அந்தப் பாட்டியும் அவரது மருமகளும்தான் வீட்டுக்கான வருமானம். அதில்தான் தனது பேத்தியின் படிப்புச் செலவுகளுக்கும் மிச்சம் பிடிக்கிறார். மகன் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் ஐம்பது/நூறு ரூபாயையும் குடித்தே அழிப்பதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். 'குடிக்கறத நிறுத்தச் சொன்னா அன்னைக்கு வீட்டுல இருக்கற பாத்தரமெல்லாம் உருளும் மருமவப் பிள்ளைய போட்டு அடிப்பான் உழைச்சு களைச்சுட்டு வர பொம்பள சோறாக்கி போட்டு அடியும் வாங்க தலையெழுத்தா' என்றார்.

கொரோனா பேரிடர் சமயத்தில் தற்போது டாஸ்மாக் திறக்கப்படுவது அதே குடும்பத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பாட்டியால் எப்படியும் தற்போது ரயிலில் பழங்கள் விற்கமுடியாது, கூலி வேலைக்கு வாய்ப்பில்லை என்பதால் மருமகளும் வீட்டில்தான் கிடக்கவேண்டும், பாட்டிச் சேமித்து வைத்த பணம்தான் தற்போது டாஸ்மாக்குக்குப் போகும்.பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் தனது அப்பா அம்மாவை அடிப்பதையும் மிதிப்பதையும் அந்தக் குழந்தை 24 மணிநேரமும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சாபத்துக்கு ஆளாகும்.அந்தப் பிள்ளையின் படிப்புக்காகச் சேர்த்து வைத்த பணம்தான் தற்போது தமிழக அரசு வருவாய்க்குச் சென்றுகொண்டிருக்கும்.

இதில் இன்னொரு கதையும் இருக்கிறது. எனது அம்மா அரசுப்பள்ளி ஆசிரியர். அவர் பணியாற்றும் பள்ளியில் ஒரு குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இது. தனது அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டுவிட்டதால் அம்மாவுடன் தனியாக வளர்ந்து வருகிறாள் அவள். அந்தச் சிறுமியின் அம்மாவுக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில் அந்தக் குழந்தைதான் சோறாக்க வேண்டும். அந்தக் குழந்தை மறுநாள் வகுப்பில் வந்துத் தூங்கி வ்ழியும் என்பார் என் அம்மா. வீட்டில் இருப்பவரை அழைத்து விசாரித்தால், 'நீ வாத்தி உனக்கு ஒன்னும் தெரியாது. பாடம் சொல்லிக் கொடுக்கறதோட நிறுத்திக்க' என்பது போன்ற வீண் விவாதங்கள்தான் வெடிக்கும் என்பார்.

இதில் ஒரே வீட்டில் அப்பனும் பிள்ளையும் சேர்ந்து குடித்துவிட்டுக் கிடக்கும் அவலமும் உண்டு. 'பிள்ளைதான் படிச்சு வளர்ந்து எங்களக் காப்பாத்துவான்னு நினைச்சேன். ஆனா வீட்டுல அப்பன் ஒரு பக்கம் குடிச்சுட்டுக் கிடக்கான். பிள்ளை ஒரு பக்கம் குடிச்சுட்டுக் கிடக்கான். இவனுங்கக் குடியிலேர்ந்துக் காப்பாத்திச் சேர்த்து வைச்சதுலதான் என் பொண்ணை M.A. B.Ed. வரைக்கும் படிக்க வைச்சேன்' எனச் சொல்லியிருக்கிறார் ஒரு மீனவச் சமூகத்துப் பெண். அந்த M.A. B.Ed. அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை.

இன்று டாஸ்மாக் முன்பு நிற்கும் பெரும்பாலான நபர்களின் குடும்பக் கதை இதுவாகதான் இருக்கும். நாம் அடிப்படைக் கட்டமைப்பிலேயே Privileged Patriarch சமூகம் என்பதால் இதுபோன்ற குடும்ப வன்முறைகள் மேலோட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இந்தக் குடும்ப வன்முறையால் களவாடப்பட்ட கல்வி உரிமைகள் அதிகம், பறிக்கப்பட்ட பிள்ளைப்பருவங்கள் அதிகம், அதில் உங்கள் டாஸ்மாக்குக்குப் பெரிய பங்கு இருக்கிறது. Social drinking, 'For the sake of fun' drinking, alcohol is our fundamental rights போன்ற privileged drinking வகையறாக்கள் இந்த கொரோனா காலத்தில் டாஸ்மாக் திறப்பதை நியாயப்படுத்துவதற்கு முன்பு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். பெண்களும்தான் குடிக்கிறார்கள் என 'ஆண்கள்' என்றாலே 'பெண்கள்' என எதிர்வாதம் வைக்கும் சிந்தனையைத் தூக்கிக் கொண்டு வரவேண்டாம்.

இந்த COVID-19 பிறகு நம் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முதலில் கிராமப்புறப் பொருளாதாரத்தை இலகுவாக்குவதிலிருந்துதான் தொடங்க வேண்டும். Labourers density அதிகம் இருக்கும் பகுதிகளில் தொடங்குவதுதான் பொருளாதாரத்தைக் குணப்படுத்தும். ஆனால் அதற்காக அதே பகுதிகளில் டாஸ்மாக்கைத் திறப்பது என்பது அதற்காக நாம் கொடுக்கும் பெரும் விலை. தெரிந்தே கொடுக்கும் பலி.

நன்றி:Aishwarya Govindarajan

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!