சமூக ஊடகம்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் திகைத்து நிற்கின்றன. வீடுகளுக்குள் முடங்கியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நாடே அடங்கியிருக்கும் காலத்திலும் வீடுகளில் இருந்தே பத்திரிகையாளர்கள் பணிகளைச் செய்ததால், நாளிதழ், வார, மாத இதழ்கள் வந்துகொண்டே இருந்தன.

இந்நிலையில், ‘குரலற்றவர்களின் குரல்’ என்று சொல்லிவரும் விகடன் குழுமம், ஊழியர்களின் (பத்திரிகையாளர்களின்) குரல்வளையை நெறித்துள்ளது. திடீரென ஊழியர்களை அழைத்து "உங்களில் 150 க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்புகிறோம்" என நிர்வாகம் சொல்லியிருக்கிறது. வீடுகளில் இருந்து வேலை செய்வதால், அனைவருக்கும் தனித்தனியாக சொல்லியிருக்கின்றனர். இந்தத் தகவல் பரவி, ஒவ்வொரு குடும்பத்தினரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாரம்பரிய நிறுவனமான விகடனின் இந்த நடவடிக்கை பத்திரிகை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இன்றைய நெருக்கடி பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல பத்திரிகையாளர்களுக்கும்தான். இதனை அனைவரும் இணைந்து எதிர்கொள்ளுவதுதான் சரியானதாக இருக்கும். ஆனால் திடீரென வேலையை விட்டு அனுப்புவதற்கு, லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதைத்தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

இத்தனை ஆண்டுகளும் விகடன் பேசிய விழுமியங்கள், தூக்கிப்பிடித்த மதிப்பீடுகள் அனைத்தையும் அதுவே நொறுக்கிவிட்டது. கொரோனாவால் மக்கள் முடங்கிக்கிடந்த போதுகூட விகடனை அனைவரும் படித்தனர். இதற்காக ஊழியர்கள் அனைவரும் உழைத்தனர். இத்தகைய உழைப்பாளிகளை வீட்டுக்கு அனுப்புவது தார்மீக நெறிமுறைப்படி தவறானது.

உழைக்கும் பத்திரிகையாளர் சட்டப்படியும் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின் படியும் தவறானது. கடும் கண்டனத்துக்கு உரியது. இதனால் பணி நீக்க நடவடிக்கையை விகடன் நிர்வாகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.