சமூக ஊடகம்

அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை போல நினைத்து செயல்படுவான். அகங்காரம் இருப்பவனால், பிறர்மீது நல்லஎண்ணம் வைக்கமுடியாது.

அகங்காரம் இருப்பவன் முழுமையான ஆன்ம உணர்வு அற்றவனாக தேகத்தின் அபிமானத்தில் நிலைத்திருப்பான். அகங்காரம் உள்ளவன் எப்பொழுதும் பிறர் சொல்வதை ஏற்கும் திறன் அற்றவனாக இருப்பான். அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை, தீமையை பகுத்தறியும் சக்தி இருக்காது.

அகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும். அகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது. இரக்கத்திற்கும், கருணைக்கும் அங்கே வேலையில்லை. அகங்காரம் உள்ளவன் கடவுளுக்கு விரோதியாகவே இருப்பான். வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும். இதுவே வெளி அகங்காரம். இதுவே, வெளியே சிரித்துவிட்டு மனதிற்குள் இந்த மாதிரி நிலை வெளிப்பட்டால் அது உள் அகங்காரம். என்னதான் வெளியே சிரித்தாலும் உள் அகங்காரம் ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

அகங்காரம் உள்ளவன் நான், எனது என்ற வார்த்தைகளை அதிகம் உரக்கச் சொல்லி பிரயோகிப்பான். சரி, இந்த அகங்காரம் எதனால் உண்டாகின்றது. உண்மையை சொல்லப்போனால் அகங்காரம் தாழ்வு மனப்பான்மையால் உண்டான ஒரு சைக்கோ தன்மை. பல இடங்களில் தாழ்த்தப் பட்டிருப்பதால் ஏற்படும் உணர்வு. இந்த உணர்வு அதிகமானாலும் அதாவது உயர்வாக தன்னை நினைக்கும் மனப்பான்மை அது அதிகமானாலும் அங்கே அகங்காரம் தலை தூக்கும். அப்படி அதிகரிக்கும் பொழுது பிறரை மதிக்காத தன்மை தனக்குள் உருவாகும். எனவே, வளைந்து கொடுத்து போகுமிடத்தில் வளைந்து கொடுத்துப்போனால் தாழ்வு மனப்பான்மையும் வராது. தான்தான் பெரியவன் என்ற உயர்வான அகங்காரமும் வராது.

பணிவு இருக்குமிடத்தில் தான் பரமேஸ்வரன் குடியிருப்பார். பாவத்தின் தண்டனை பெறும் பொழுது ஆண்டவன் கண்ணுக்கு அகங்காரம் இருப்பவனே முதலில் தட்டுப்படுகின்றான். அகங்காரம் நல்லவர்கள் நட்பை, அறிவில் சிறந்தவர்களின் நட்பை விலக்கிவிடும். அகங்காரம் இருப்பவன் ரத்தம் சூடேற, நரம்புகள் புடைக்க உரக்க பேசுவதால் அங்கே ரத்தம் சம்பந்த நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு விரைவில் ஆட்படுவான். உள்ளே அமைதியான சிந்தனைகளற்று உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பதால் மன அமைதி அங்கே கேள்விக்குறியாகும்.

அகங்காரத்தை போக்க வழி இருக்கின்றதா? கண்டிப்பாக இருக்கின்றது. இந்த உடல் கூட எனக்கு சொந்தமில்லை. இதை இந்த உலகத்தில் விட்டுச்செல்ல வேண்டும் என்ற நினைவு இருக்க வேண்டும். நம்மால் இறைவனின் துணையின்றி ஒரு துரும்பை கூட நகற்ற முடியாது என்ற நினைவு வேண்டும், யாராவது உங்கள் செயலுக்காக உங்களை புகழ்ந்தால், உடனே இது ஜோதியான தந்தை இறைவன் சிவபெருமானால் நிகழ்ந்தது என்று அவரை மனதில் புகழ்பாட வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறர்மனதை புண்படுத்தாமல் இருக்க கவனம் வைக்கவேண்டும். பிறரின் அவமதிப்பு நிறைந்த வார்த்தைகள் தனக்குள் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு கவனமாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த அவமதிப்பு வெறியாக மாறி அகங்காரமாக மாறிவிடலாம். எனவே, எல்லோரிடமும் எப்பொழுதும் அன்பாக உள்மனதிலிருந்து நடக்க வேண்டும்.

உள்ளும் புறமும் ஒரேமாதிரி அன்பிருந்தால் உள்ளேயும் அகங்காரம் இருக்காது. அது வெளியிலும் அகங்காரமாக வெளிப்படாது. அன்புதான் சிவம் அன்புதான் அகங்காரமற்ற நிலை. அன்புதான் அனைவரையும் ஒன்றிணைக்கும் மாலை. அன்பு ஒன்றுதான் ஆசிர்வாதம். அன்புதான் நம் ஆண்டவன். அன்பே சிவம்.. அன்பே ஜெயம்.. அன்பே நித்தியம்.. அன்பே சத்தியம்.. அறிவே சக்தி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

- அன்புடன் சுந்தரமூர்த்தி

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.