சமூக ஊடகம்

ஒருநாட்டின் அல்லது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது போக்குவரத்துச் சாலைகள். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசம் பள்ளத்தாக்குகளும் மலைகளும் நிறைந்த பிரதேசம். இதன் சாலைப் போக்குவரத்து எப்போதும் சிரமமானது.

குளிர்காலத்தில் அதற்கும் மேலாக ஆபத்தானது. இந்தப் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இரு பெரும் சாலையமைப்புக்கள் பற்றிய குறிப்புக்களைத் தனது பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் தொகுத்திருக்கின்றார் சக்கரவரத்தி மாரியப்பன். அவருக்கான நன்றிகளுடன் அவ்விரு குறிப்புக்களையும் இங்கே பகிர்வு செய்கின்றோம்.

காஷ்மீரின் செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வரும் புதிய இரயில் பாலம்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒரு பகுதியான உதம்பூர் - ஸ்ரீநகர்-பாரமுல்லா ஆகியவற்றை இணைக்கும் இந்த இரயில் பாதை 2022 ல் முடிவு பெறும். பிரான்ஸின் ஈஃபில் கோபுரத்தை விட அதிகமான உயரம் கொண்டது இந்த வடிவமைப்பு. நடுவில் எந்த வித தூண்களும் இல்லாமல் மலைப்பகுதியில் உள்ள அடித்தளங்களின் பலத்தில் அமைக்கப்பட்ட இது உலகின் சிறந்த வடிவமைப்புகளில் ஒன்றாகும்.

260 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளியை தாங்கி நிற்கும் வல்லமையை இந்த பாதை பெற்றுள்ளது. கடுமையான பனிப்பொழிவு, மலையைக் குடைந்து அமைக்கப்படும் சிக்கலான இரயில் பாதை கொண்ட இத்திட்டம் செயலுக்கு வரும் போது அம்மாநில மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும்.

அடல் குகைவழிச் சாலை.

காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும் மலைப்பாதை கணவாய்கள் இரண்டு. ஒன்று ஜோஜி லா. மற்றொன்று ரோஹ் டங். Zohjila - பனிப்பொழிவு நிறைந்த கணவாய் என்பது பொருள். ஸ்ரீநகர் லடாக் செல்லும் பாதை Roh Tang - பிணங்கள் நிறைந்த பாதை என்பதே இதன் பொருள் என்கிறார்கள். பெயரே பயத்தை வரவழைப்பதாக இருந்தது. ஹிமாச்சல் - லே கார்கில் வழியான பாதை. இங்கு Pass என்பதை கணவாய் என்றும் Tunnel என்பதை மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை என்றும் அறிக. லா என்பது கணவாயைக் குறிக்கும் சொல் என்கிறது விக்கிப்பீடியா. சிலர் ஜோஜி லா பாஸ் (Pass) என்று எழுதுவது தவறு என்று சு(கு)ட்டுகிறார்கள்.

ரோஹ் டங் டனல் தரைமட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் [ 10171 ft] அமைக்கப்படும் சாலை வழித்தடம். ரோஹ் டங் கணவாய் உயரம் 13 ஆயிரம் அடி [ 13051 ft]. நவம்பர் முதல் மே மாதம் வரை பனிப் பொழிவு காரணமாக லடாக் பகுதி சாலை வழியாக துண்டிக்கப்படுகிறது. இந்த ஆறு மாத தேவைக்கு அத்தியாவசதி பொருள்கள் கையிருப்பு, உணவு, போக்குவரத்திற்கு தேவையான எரிபொருள் போன்றவற்றை முன் கூட்டியே இங்கு எடுத்துச் சென்று சேமிக்க வேண்டும்.

இதில் வரும் செப்டம்பர் மாதம் (2020) முதல் Rohtang Pass பகுதியில் உள்ள Rohtang Tunnel குகைச் சாலை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக இவ்வழியில் ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

காஷ்மீருக்கு வரும் சுற்றுலா வாசிகள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து தான் இந்த இரு நகரங்களை கடக்க முடியும். புதிய குகைப்பாதை 8.8 கி.மீ நீளம் கொண்டது. இதன் மூலம் மணலி - கீலாங் Keylong தூரம் 45 கி.மீ குறையும். ரூ.3500 கோடி செலவில் நடைபெறும் இப்பாதை பணி நிறைவுற்றால் நமக்கு போக்குவரத்து செலவில் பல நூறு கோடிகள் சேமிப்பு கிடைக்கும்.

வெடி வைத்து தகர்த்து, சுரங்கம் போல தோண்டி, பாறைகள் சரிந்து விழாமல் வளைவான கான்கிரீட் கூரைகள் அமைத்து, இருளைப் போக்க மின் விளக்குகள், எதிரில் வரும் வாகனங்கள் தெரிய வசதிகள், மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க முதலுதவி என்று பல கட்டங்களை கடந்து இந்தப் பாதை நாட்டுக்கு அரப்பணிக்கப்பட இருக்கிறது.

முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது நண்பர் ஒருவர் ரோஹ் டங்கில் வசித்து வந்திருக்கிறார். இங்குள்ள மக்கள் சிரமத்தை எடுத்துச் சொல்லி மலையைக் குடைந்து பாதை அமைக்க அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் தொடர்ந்த முயற்சியில் சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் இக்கனவு சாத்தியமாகி உள்ளது.

இப்போது அவரது நினைவைப் போற்றும் விதமாக அடல் குகைவழி AtalTunnel என்று பெயரில் அழைக்கப்படுகிறது. ஜோஜி லா பாதை திட்டமிட்ட காலத்தைத் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் நான்கு வழி குகைச்சாலையை குறைத்து சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அது நடைமுறைக்கு வர 2022 டிசம்பர் மாதம் ஆகும்.

சீனா - திபெத் தலைநகர் லாசா Lhasa தங்குலா கணவாய்க்கு TangguLa அடுத்து உலகின் இரண்டாவது உயரமான பாதை இதுவே ஆகும். சீனா அங்கு இரயில் பாதையை 2006 ல் நிர்மாணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Chakkravarthy Mariappan

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்