சமூக ஊடகம்

இன்று செப்டெம்பர் 21, உலக அமைதிநாள் மற்றும் மறதி நோய் (Alzheimer) நாள். இந்த இரண்டு நாட்களும் ஒரே தினத்தில் அமைந்திருப்பதும் கூட விசித்திரமும் ஒற்றுமையும் நிறைந்தது.

அரசியலில் மக்களின் மறதி, தலைவர்களுக்கு வாய்ப்பான வரம். ஆனால் தனி மனிதர்களது வாழ்வில் அது மிகப்பெரிய சோகம். அந்தச் சோகம்  நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல, அவர்கள் குடும்பங்களுக்குமானது.

செப்டெம்பர் 21 - உலக அமைதி நாள்

"மனிதக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் மாண்பையும், அவர்களது சமமான, அன்னியப்படுத்தப்பட முடியாத உரிமைகளையும் ஏற்றுப் பேணுதலே சுதந்திரம், நீதி, உலக அமைதி" என்பவற்றிற்கு அடிப்படையாகும் என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் சாற்றுரை. "உன்னைப் போல் பிறரையும் நேசி " என்பதுதான் உலக சமயங்கள் எல்லாம் கூறும் ஆன்மீக தத்துவார்த்த அடிப்படை.

இவைகள் வெறும் கோட்பாட்டு வாக்கியங்களாக மட்டும் விளங்குமிடத்து, உண்மையான உலக அமைதி சாத்தியப்படாது. சூழல் மாசுறுதல் குறித்துப் பேசும் உலகநாடுகள் பலவும், புதிய தொழில் அபிவிருத்தியின் பெயரால் மாசு நிரப்புதலும், போர்நிறுத்தம் பேசும் வல்லருசுகள், போர்த்தளவாட உற்பத்தி செய்தலும், உலக அமைதிக்கான எதிர்வினை. ஒவ்வொரு மனிதரும் சக மனிதரின் உணர்வினை மதிப்பதில் தொடங்கும் உலக அமைதிக்கான செயல்வினை.

இணைப்பில் அழுத்தி உலக அமைதிநாள் கட்டுரையினை முழுமையாகக் காண்க !

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், டிமென்ஷியா என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வருடந்தோறும் இந்த எண்ணிக்கை மேலும் ஒரு கோடி அதிகரிக்கவும் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  இந்த எண்ணிக்கை 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரும் மறதிநோய் குறித்த எண்ணிக்கை. ஆனால் இனிவரும் காலங்களில் இந்நோயால் இளையவர்களும் பாதிக்கப்படலாம் என மருத்துவத்துறைசார்ந்தோரும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றார்கள். ஏன்..?

நேற்று என்னுடன் உரையாடிய ஒரு தாய், தனது பிள்ளைகளின் தொலைபேசி எண் தனக்கு ஞாபகமில்லை என்கிறார். அவருக்கு மறதிநோய் இருக்கிறது என்பதல்ல அதற்கான காரணம். நவீன கையடக்கத் தொலைபேசியின் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட பிள்ளைகளின் தொலைபேசி எண்கள் அவரது நினைவில் இல்லை என்பதுவே காரணம். பிள்ளைகளுக்கும் கூட பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் நினைவில் இருப்பதில்லை. காரணம் ஒன்றேதான். இது நோய்குறி அல்ல ஆனால் இந்த நோயினைத் தூண்டக் கூடிய ஒரு செயல்முறைதான்.

பொதுவாக முதுமையில் மூளையின் செல்கள் பாதிக்கப்படும் போது ஞாபக மறதி ஏற்படும். ஆனால் மாறிவரும் தற்கால வாழ்க்கை சூழலில் இளைஞர்களும் குழந்தைகளும் கூட ஞாபக மறதிக்கு உட்படுகின்றனர். அதற்கான காரணிகளில் வளர்ந்துள்ள தொழில்நுட்பமும் சாதனங்களும், வாழ்க்கை முறையும் கனிசமான பங்கினை வகிக்கின்றது. தொழில்நுட்பச் சாதனங்களில் அதிக நேரம் செலவழிப்பது, துரித உணவுகள், போதிய உறக்கம் இல்லாதது, அதீத மதுப்பழக்கம், கவனச் சிதறல், மன அழுத்தம் என்பன மறதி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்.

மனித மூளையில் நினைவுப் பதிவு, சில மணி நேரங்கள் முன் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்வது,  10, 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது,   இடைப்பட்ட காலத்தில் சுமார் 3 முதல் 6 மாதங்களுக்கு முன்னால் நடந்தது என மூன்று வகைகளில் பதிவாகின்றது.

முதுமை காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படக் கூடிய அல்சைமர் டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி அல்சமைர் நோய்  உலகின் சாபக்கேடு என வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில் வயது முதிர்வில் வரும் டிமென்ஷியாவைக் குணப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மட்டுமே முடியும். வாழ்நாள் முழுவதும் மூளையைத் தொடர்ந்து திறமையாகப் பயன்படுத்தி வந்தவர்களின் மூளை டிமென்ஷியாவுக்குப் போகாது என்று கற்பிதம் இருந்தது. ஆனால் சம கால வாழ்க்கை முறை  எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மறப்பதில் தொடங்கி, சாப்பிட்டதை மறந்துவிடுவது, சுகாதாரப் பழக்கவழங்கங்களைப் பேணாதது, உறவினர்களை மறந்துவிடுவது எனத் தொடரும் டிமென்ஷியா, இறுதியில் தன் சொந்தப் பெயர், அடையாளமே தெரியாமல் நிற்பதில் கொண்டுபோய் விடும். இது அவ்வளவு பெரிய சிக்கலா? எனக் கேட்பவர்களுக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கனடாவின் கொலம்பியா மெட்ரோ வான் கூவரில் தனியாக ஒரு கிராமமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட இக்கிராமத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டுமே இருக்கும். இதன்மூலம், ஞாபக மறதி உள்ளவர்கள் தவறுதலாக வெளியே சென்று, திரும்பி வருவதற்கு வழிதெரியாமல் காணாமல் போகும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்னும் உயரிய நோக்கோடு அமைக்கப் பெற்ற இந்தக் கிராமம் ஒரு வகையில் மிகப்பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலைதான்.

சரி மறதியைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

நமக்குப் பிடித்தமான வேலையைச் செய்தல், சரியான நேரத்தில், போதுமான அளவு தூங்குதல், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல், சோர்வு ஏற்படும்போது பிடித்த படங்கள், பயணங்கள், உணவுகள், உடைகள் என மனதை இலகுவாக்கிக் கொள்ளுதல், சிறு சிறு கணக்குகளை மனதில் போடுதல்,  இயற்கையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட   உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளல், ஞாபக சக்திக்கான மாத்திரைகளைத் தவிர்த்துவிடுதல்,  யோகா, பிராணயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் மேற்கொள்ளல், மதுபானம், புகைப்பிடித்தல் என்பனவற்றை அறவே தவிர்ப்பது, அவசியமான தருணங்களில் மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்துதல் என்பன முக்கியமானது.

இது தவிர தமிழர்களின் உணவுப் பாரம்பரியத்தில் முக்கியமான மஞ்சளை உணவில் சேர்ப்பதால் முதிந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைபாட்டினைக் குறைக்கும். மஞ்சள் அல்சமைர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவான Plaque குறைகின்றது என துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமையின் (Curcumine) என்ற ஒரு மூலக்கூறு,  அல்சைமர் நோயைக்குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும்  உதவும் என்கிறது இந்த ஆய்வுக் குறிப்புக்கள்.

மனச்சோர்வு, மன அழுத்தம்(Depression) என்பவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கைகண்ட மருந்தாக இசை உள்ளது. மென்மையான இசை நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதால், நிம்மதியான தூக்கம் உண்டாகின்றது. இசை மனத்திற்கு மகிழ்வூட்டும் காரணி என்பதால், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இசை சிகிச்சை அவர்களுடைய மன வேதனை அல்லது பாதிப்பில் இருந்து வெளியில் வரவைக்கிறது. அல்சமைர் (Alzheimers) எனப்படும் வயதானவர்களைத் தாக்கும் மறதி நோயைக்கட்டுப்படுத்தவும் இசை சிகிச்சை பயன்படுகிறது. இசை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இத்தகைய நோயாளிகளின் உடலில் மெலடோனின்(Melatonin), எபிநெப்ரின்(Epinephrine), நார் எபிநெப்ரின் (Nor epinephrine)முதலிய சுரப்புகள் அதிகரித்ததாக அவர்களிடம் இரத்தப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறே பார்கின்சன்(Parkinson's) மற்றும் டெமென்ஷியா (Dementia) போன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் இசை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, பார்கின்சன் நோயாளிகள் உடலில் அசைவுகள் தென்பட்டதாகவும், டெமென்ஷியா நோயாளிகள் தமது பழைய நினைவுகளை மீளப்பெற்றதாகவும் கூடத் தெரிய வந்துள்ளது.

தமிழர்களின் வழிபாட்டு முறைமைகளிலும் மேற்கூறிய அனைத்தும் இயைந்து வந்திருக்கின்றன. அதனால்தான போலும் எங்கள் முதியவர்களில் பலர் முதுமையிலும் சிறந்த ஞாபசக்தியோடு இருந்தார்கள் போலும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.