சமூக ஊடகம்

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.

முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
.
நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது. நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது
.
உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...
நீங்கள் அப்படி நினைக்காதவரை. அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறேர்கள். நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்.அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்.
.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அழமாக நிதானமாக மூச்சு விடுங்கள். நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்.
.
உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும். செய்து பாருங்கள். நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம். நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது.

நோய்கள் அனைத்தும் ஒரு வகையான சிக்னல் தான்.வியாதிகள் அனைத்தும் ஒரே காரணத்தினால் தான் உருவாகிறது. அது தான் மனஇறுக்கம் . முதலில் மனஇறுக்கத்தை உடலில் இருந்து வெளியேற்றுங்கள்!
.
பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும். உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று. உங்களை நீங்கள் குணபடுத்த முடியும். உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது. உங்களால் மருந்துகள் இன்றி ஒரு மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட சரி செய்ய முடியும்.

- அன்புடன் NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்.

பயனுள்ள பல குறிப்புக்களைத் தொடர்ந்து தருகின்ற ஐயா அவர்கள், நாகப்பட்டினத்தில் தொடர்ந்து 185 நாட்களாக தனது சொந்த செலவில் பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கி வருவதை பெருமைப்படுத்தும் விதமாக, நாகப்பட்டினம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னாருக்கு "கோவிட் 19 சேவையாளர்"விருது, 5.10.2020 ல் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

விருதினைப் பெற்றுக் கொண்ட ஐயா, " இந்த இடர்காலத்தில் கபசுர குடிநீர் நாகை மாவட்டத்தில் எம்மிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எண்ணவுமில்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தை கருத்தில் கொண்டு இதை செய்தேன். மார்ச் 27 ம் தேதி முதல் ஏப்ரல் 30 வரை திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சென்னை போன்ற பகுதிகளில் கபசுர குடிநீர் கஷாயம் 60ml ரூபாய் 30 க்கு வியாபாரம் செய்தார்கள் ஆனால் அப்பேர்ப்பட்ட பணம் தேவையில்லை என்று கருதி தான் இதை இன்று வரை இலவசமாக செய்து வருகிறேன். இந்த வாய்ப்பை நாகை மாவட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்து கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னுடைய கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என்னுடைய இந்த பணி தொடர இறைவன் எனக்கு அருள் புரிய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.