சமூக ஊடகம்

மரபு வழி விவசாயத்தை ஆழ்துளை கிணறு இல்லாமல் செய்வீர்களா? மரபுவழி விவசாயம் பற்றிக்கதைத்தாலே இப்படியான ஒரு வாதத்தினை சிலர் முன் வைப்பார்கள். அவ்வாறான வாதங்களை அனுபவரீதியாக எதிர்கொள்கிறது ஓசை செல்லாவின் சமூகவலைத்தளப் பதிவொன்று. இப்பதிவு மரபுவழி விவசாயத்தை அறிவியல் மறைத்தது என்பதன் முழுமையான வரலாறு அல்ல. ஆனால் ஒரு சோற்றுப் பருக்கை. அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பகிர்கின்றோம்.-4TamilmediaTeam

1. முதலில் என் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு பம்ப்செட் எல்லாம் கிடையாது. கரண்டே இல்லை. மாடுகள் பூட்டி கவலை (கமலை) ஓட்டித்தான் என் தாத்தா , அப்பா காலங்களில் விவசாயம், 80 அடி கிணறுகளை கொண்டு நடந்தது. பருத்தியும் கடலையும் புகையிலையும் எள்ளும் துவரையும், கம்பும் சோளமும் விளைவிக்கப்பட்டன என் கண் முன்னால்.

2. பின்பு கரண்ட் கொடுக்கப்பட்டவுடன் கிணறுகள் போட்டி போட்டு ஆழப்படுத்தப்பட்டன. மோட்டார்கள், ஆயில் இஞ்சின்கள் வந்தன. நிலத்தடி நீர் கீழிறங்கத்தொடங்கியது. 100 அடி 150 அடி என்று எல்லோரும் போட்டி போட்டு வாழ்வாதாரத்திற்காக போராடினோம்.

3. இன்னும் பத்து ஆண்டுகளில் அதுவும் இயலாமல் போனதால் போர்வெல்கள் எனப்படும் ஆழ்துளைக் கினறுகள் விவசாய நிலங்களுக்கு வந்தன. அதற்கு முன்பு ஊர்மக்களுக்காக அரசாங்கம் குடிநீர் வழங்க அமைத்த ஆழ்துளைக்கிணறுகளைத்தான் பார்க்கமுடியும். விவசாயத்துக்கு அவை வரவில்லை. ஆனால் ஒரு பத்தாண்டில் 400 அடி 500 அடி 600 அடி என்று 1000 அடிவரை ஆழ்துளை கிணறுகள் வந்தன. சப்மெர்சிபில் மோட்டார்களு வந்தன. இதன் காரணமாக கிட்டத்தட்ட 90 சதவிகித கிணறுகள் நீர்வற்றி பயனற்றுப் போயின.

4. நீர்மட்டம் கீழிறங்க கீழிறங்க விவசாயிகளும் இடங்களை காற்றாலைக்கு விற்றுவிட்டு நகரங்களை வாழ்வாதாரங்களுக்காக முற்றுகையிட்டனர் 20 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாக கிடப்பதை கண்ணீர்துளிர்க்க பார்த்துக்கொண்டே கடக்கிறேன்.

5. இயற்கையை செயற்கையால் அடக்குவதற்கு அல்லது மாற்றீடு செய்ய ஆரம்பித்தால் அது எப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவந்த விவசாயத்தை 30 ஆண்டுகளில் ஒன்றும் விளைவிக்கமுடியாத தரிசாக மாற்றும் என்பதை உடுமலை தாராபுரம் பகுதிகளைப் பார்த்தால் அனைவருக்கும் விளங்கும்.

6. இப்பொழுது சொல்லுங்கள் மரபுவழியில் இயற்கையோடு நெருங்கி ஆடு, மாடு, கோழி, செயற்கை உரங்கள் பூச்சிமருந்து இல்லா நூற்றாண்டுகளாக நடந்த விவசாயத்தை கட்டுபாடுகளற்ற நவீன அறிவியல் வாழ்க்கை முறையால் வெறும் 30 ஆண்டுகள் கூட நடத்த முடியவில்லை என்கிற உண்மையை. அதைத்தான் நாங்கள் நிலையான தன்மை (Sustainability) என்கிற அளவுகோலால் அளக்கச்சொல்கிறோம் அறிவியல் பூர்வமாக!

அறிவியல் என்பது இயற்கையை கடித்துக்குதறி வன்புணர்வதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. பாரம்பரிய யுக்திகள் எல்லாம் இந்த Sustainability அளவுகோலில் முதலிடம் பிடிக்கும் இயற்கை அறிவியல் சாதனைகள். ஒரு மாடுகள் பூட்டி நீரிறைக்கும் கமலை என்பது எவ்வளவு அறிவியல்கூறுகளை கொண்டு இயங்கியது என்று ஒரு முறை வரிசைப்படுத்திப்பாருங்கள். நெம்புகோல் தத்துவம் முதல், தோல், இரும்பு, மரம், கயிறு, புவியீர்ப்பு விசை நுட்பங்கள் சேர்ந்த பொருளியல் மற்றும் ஒரு பொறியியல் என்கிற புரிதலை நீங்களும் சிறிதாவது புரிந்துகொள்ளக்கூடும். இதனை நடைமுறையில் கையாண்டவர்கள் எழுதப்படிக்காத அறிவியல் அறிஞர்கள். அதைக்கிண்டலடிப்பவர்கள்......?
வாழ்க இயற்கை நலத்துடன்!

நன்றி : தமிழ் இணைய நாடோடி ஓசை செல்லா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.