சமூக ஊடகம்

சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள், அங்கு தங்கி இருந்த போது சிவனுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்கள்.

தென் சீனாவின் முக்கிய துறைமுகமான குவாங் ஹீவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர் சம்பந்தப் பெருமாள் தவச் சக்கரவத்திகள் அப்போது அங்கு ஆட்சி செய்த மன்னர் குப்லாய்கான் அனுமதி பெற்று கி.பி.1281 ஆம் ஆண்டு திருக்கணீசுவரமுடைய நாயனார் கோயிலை அங்கே கட்டினார்.

சகயுகத்தில் சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவை அக்கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டில் உள்ளது.அக்கல்வெட்டின் இறுதியில் சீன எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களாக தமிழ்நாட்டில் இருந்து வணிகர்கள் சீனாவில் வணிகம் செய்து வருகிறார்கள். அங்கிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வணிகம் செய்தனர். பூம்புகார், கொற்கை, கடல்மல்லை,பொதுகே போன்ற துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த வாரத்தில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆகழாய்வில் சீனப் பீங்கான் பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. அவை குங்பாய் மற்றும் வெள்ளை நிற பீங்கான் ஆகும். இவை 11மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.

தாராசுரத்திலும் இதே காலக்கட்டத்தை சார்ந்த ஜிந்தாசென், செலடான், லோங்குவான், யுயே, பீங்கான் பாண்டங்கள் கிடைத்துள்ளன.12,13 ஆம் நூற்றாண்டில் சீன சுங் அரசர்கள் வெளியிட்ட காசுகள் தஞ்சை மாவட்டம் ஓலயகுன்னம்,தல்லிக்கோட்டை போன்ற ஊர்களில் கிடைத்துள்ளன. பூம்புகாரிலூம் சீன மது ஜாடி, சீனக்காசு,சீன குடுவை போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவையனைத்தும் சோழநாடு சீனாவுடன் இருந்த வணிக தொடர்பை உறுதி செய்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.