சமூக ஊடகம்

டென்மார்க்கில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மில்லியன் கணக்கான மிங்க் விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன. அதிர்ச்சி தரும் இந்த உயிரழிப்புக் குறித்த ஒரு உருக்கமான பதிவினை  ஜெயந்தன் ஜேசுதாஸ் தனது சமூகவலைத்ளத்தில் எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் -4Tamilmedia Team

இதுவும் இனவழிப்புதான்..!

டென்மார்க் தேசத்தையும் அதன் தலைநகரான கோபன்ஹேகனையும் பெரிதும் மதிப்பவன் நான். அதற்கான முதல் காரணம், 1910-ம் ஆண்டு, அசலான புரட்சித் தலைவி கிளாரா ஸெட்கின் தலைமையில் கோபன்ஹேகனில் நடந்த சரவதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்தான், அவர், உலக மகளிர் தினத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதுமட்டுமல்ல; டென்மார்க்கின் பூர்வக் குடிகள், அடைக்கலம் தேடி வந்து குடியேறிய மக்கள் என எல்லா இனங்களையும் அரவணைக்கும் மனித நேயத்தையும் 110 ஆண்டுகளுக்கு முன்பே தனது உரையில் முன்மொழிந்தார்.

இரண்டாவது காரணம், கோபன்ஹேகனில் ஐம்பதாயிரத்துக்கும் அதிமான, தமிழக, இலங்கைத் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள். தமிழை மறக்காமல், அங்கே தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கி, தங்கள் பிள்ளைகளைத் தமிழும் படிக்க வைக்கிறார்கள். மூன்றாவது முக்கிய காரணம் டென்மார்க்கிலிருந்து உலகப் படவிழாக்களில் வலம் வரும் சமரசமற்ற உலக சினிமாக்கள். கடந்த ஆண்டு 17-வது சென்னை சர்வதேசப் படவிழாவில் கலந்துகொண்ட ‘சன்ஸ் ஆஃப் டென்மார்க்’ திரைப்படம், உலகம் முழுவதும் எழுற்சிபெற்று வரும் மதவாத ‘மோடி’க்கள் டென்மார்க்கிலும் உண்டு என்பதை உரக்கச் சொன்னது.

நான்காவதாக ஒரு முதுபெரும் காரணம் உண்டு. அது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மிகுந்திருக்கும் சிறிய‘மிங்க்’வகை விலங்கினம். நம்ம ஊர் கீரிப் பிள்ளைகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த ஐரோப்பிய கீரிப்பிள்ளைகள், குழந்தைகளைப் போன்ற வெகு சாதுவான, மென்மையான ஜீவன்கள். செல்லப் பிராணிகளாகவும் வளர்க்க ஏற்றவை. உறைபனி காலத்தில் மனிதர்கள் அணியும் குளிர் தடுப்பு ஆடைகளுக்கு தங்களுடைய பொசுபொசுவென்ற வெல்வெட் முடிகளை கடந்த 3 நூற்றாண்டுகளாகக் கொடுத்து வருகின்றன.

ஆம்! மிங்க் வகைக் கீரிப்பிள்ளைகளைக் கூட்டம் கூட்டமாக பண்ணைகளில் வளர்த்து, அவற்றின் முடிகளை அறுவடை செய்து, தங்கள் தேவைகளுக்குப் போக குளிர்நாடுகளுக்கு ஏற்றுமது செய்வதும், அதன்மூலம் பல ஆயிரம் மில்லியன் டாலர்களை அந்நியச் செலாவாணியாக ஈட்டுவதையும் தங்கள் பொருளாதாரத்தின் முக்கிய கண்ணிகளில் ஒன்றாகவே பாதுகாத்து வருகின்றன ஐரோப்பிய யூனியனில் உள்ள 22 நாடுகள்.

இந்த மிங்க் கீரிப்பிள்ளைகளை வளர்த்து அவற்றின் ‘ஸ்பர்’ கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் உலக மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் நாடுகளில் சீனத் திருடனும் ஒருவன். ஆனால், உலக ஸ்பர் சந்தையில் குளோபல் லீடர் என்றால் அது டென்மார்க் தான். உலக ஸ்பர் சந்தையில் 27 சதவீத சந்தைப் பங்கை தன் வசம் வைத்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா? தலைநகர் கோபன்ஹேகன் உட்பட டென்மார்க்கின் ஆயிரக் கணக்கான மிங்க் பண்ணைகளில் கோவிட் 19 தொற்றிவிட்டது. இந்த நாவல் கொரோனா வைரஸ் மிங்க்குகளை எளிதாகக் தாக்கிவிட்டது. தொற்றைப் பரிசளித்தவர்கள் மனிதர்கள். கடந்த 3 நூற்றாண்டுகளாக டென் மார்க்கிற்கு தங்கள் ரத்ததின் ஒரு பகுதியாக விளைந்த தங்களுடைய ஸ்பர் முடிகளைத் தந்த இந்த அப்பாவி ஜீவன்களுக்கு கொரோனா பெரும் சாபமாக மாறிவிட்டது!

மிங்க் ஜீவன்களை வைத்து நாட்டின் பொருளாதாரத்தையே வலுவாக்கிக்கொண்ட டென்மார்க், மனசாட்சியே இல்லாமல் 15 மில்லியன் மிங்க் விலங்குகளை கொன்று குவிக்க முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டது. மிங்க்குகளைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குழிகளில் தள்ளும் ஒளிப் படங்களையும் காணொலிகளையும் காணுப்போது கண்ணீர் பெருகுகிறது. ஏனோ நாசி முகாம்களில் கொன்று குவிக்கப்பட்ட யூதர்களின் உடல்களை பார்ப்பதுபோல துக்கத்தை அடக்கமுடியாமல் போயிற்று.

ஒரு காலத்தில் நம் ஓவியர்கள் வரையும் தூரிகைகளில் மிங்க்குகளின் ‘மயிர்க் கால்கள்’ இடம்பெற்றன. பின்னர் விலங்கு வதை அமைப்புகளின் தீவிர களமாடலுக்குப் பின்னர் அவை இல்லாமல் போயின. இந்த பூமியின் அற்புத உயிரினங்களில் ஒன்றான மிங்க்குகளைக் கொல்லும் மனித சமுகம், தனது நன்றியுணர்ச்சியை இழந்து வருவதற்கான அடையாளமாகவே டென்மார்க்கின் இந்த‘மாஸ் கில்லிங்’கொடுமையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆக்கபூர்வமான தீர்வை எட்டுவதற்கு பதிலாக, மில்லியன்களில் இந்த மெல்லுயிர்களைக் கொல்வது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல.

இதுவும் இனவழிப்புதான் நன்றி கெட்ட மனிதர்களே!

- ஜெயந்தன் ஜேசுதாஸ்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.