சமூக ஊடகம்

பொதுவாகக் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பொதுவிடங்களில் வெளிக்காட்டினால் உடனே சூழ இருப்போர் அவர்களின் வளர்ப்பைப் பற்றி, பெற்றோரைப் பற்றி, குறிப்பாக அம்மாவைப் பற்றிய விமர்சனங்களுக்குள் தாவுவதையே பெரும்பாலும் பார்த்திருப்போம்.

அதிலும் அதிகாரத் தோரணையில் இருப்பவர்கள் பெற்றோரை வெறும் கம்பீரப் பார்வையாலேயே கூனிக் குறுக வைத்துவிடுவதில் வல்லவர்கள். மாறாக அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற இந்த சம்பவம் ஒரு இன்ப அதிர்ச்சியென்றே சொல்லலாம். இச்செய்தியை படித்தபோது நெகிழ்ந்து போனேன்.

பணி நிமித்தம் பள்ளிக்குச் சென்ற கார்னர் ஜோன்ஸ்(Cornner-Jones) என்ற காவல்துறை அதிகாரி, அங்கிருந்த குழந்தைகளில் 4 வயதுள்ள ஒரு சிறுவன் சற்று இறுக்கமாக இருப்பதைப் பார்க்கிறார். அவனிடம் பேச்சுக் கொடுத்ததும், அச்சிறுவன் திடீரென தரையில் விழுந்து அழ ஆரம்பிக்கிறான். ஆனால் அவரோ அவனை ஆறுதல் படுத்த முடிவெடுத்து , தானும் அவனருகில் படுத்துக் கொண்டு அவன் கண்ணீரைத் துடைத்து, சமாதானப் படுத்தியிருக்கிறார். உடனே அச்சிறுவன் சமாதானமடைந்து எழுந்து விட்டான்.

செய்தி பரவலாகி, இது பற்றிக் கேட்டபோது அந்த அலுவலர் சொன்ன பதில் “குழந்தைகளுக்கும் நம்மைப் போலவே ஏமாற்றங்களும், கோபதாபங்களும் இருக்கவே செய்யும். அவர்கள் ஒன்றும் இயந்திர மனிதர்கள் அல்ல, நாம் நினைத்தபடியே நடந்து கொள்ள. நாம்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.” ஒரு அதிகாரியாக நின்று விடாது, தானும் 3 குழந்தைகளின் தாய் எனும் நிலையில் இருந்தும் யோசித்திருக்கிறார்.

அழகாய் உடையணிந்து, மலர் போலச் சிரிக்கும் குழந்தைகளைக் கொஞ்சத் தயாராக இருக்கும் நாம், கோபம் கொண்டோ சோர்ந்தோ அழுது புரளும் ஒரு குழந்தையை நெருங்க விரும்புவதில்லை. குழந்தைகள் 24 மணி நேரமும் நமக்குப் பிடித்த தேவதைக் கோலத்திலேயே வீற்றிருந்து அருள்பாலிக்க முடியாது. ஏனென்றால் ஜோன்ஸ் சொல்வது போல அவர்களும் மனிதர்கள்தான். விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிக் குழப்பங்கள் அவர்களுக்கும் உண்டு என்பதைப் புரிந்து கொள்வதும், அன்பையும் அரவணைப்பையும் நாம் தரத் தயார் என்பதை உணர்த்துவதும்தான் நமது மன முதிர்ச்சியைக் காட்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நன்றி: Lakshmi Balakrishnan

மூலம்: இணையம்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.