சமூக ஊடகம்

எரிபொருட்களை கடத்திக் கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை ஊடறுத்துச் செல்லும் நிலக் கீழ் குழாய் கட்டுமானப் பணிகளை எதிர்த்து (Dakota Pipeline) அமெரிக்க பழங்குடியினர் (இந்தியர்கள்) ஒன்றிணைந்து நடத்தி வரும் நூதனப் போராட்டம் ஊடக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. 

தங்களை நீர்ப் பாதுகாவலர்கள் என அழைக்கும் இவர்கள் குறித்த கட்டுமானப் பணிகளால் சுத்தமான நீர் கிடைக்கப்பெறுவது மேலும் தடைப்படும் என்றும், வன விலங்குகள், தாவரங்கள்  சூழல் மாசு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் எனவும் இந்த எரிபொருட்குழாய்களில் சேதம் ஏற்படின் மிகக் கடும் நச்சு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறி இக்கட்டுமானப் பணிகளை எதிர்க்கின்றனர். இன்றைய நிலவரப்படி சுமார் 80% வீதமான கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. 

சுமார் 1,886 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்நிலக் கீழ் எரிபொருட் குழாய்கள், டகோட்டா, இயோவா, ஒட்டும்வா, இலினோய்ஸ், பகோட்டா ஆகிய பிரதேசங்களை குறுக்கிடுகிறது. இக்கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி அமெரிக்க பழங்குடியினர் நடத்தி வரும் போராட்டங்களை ஊடக கவனம் பெற வைப்பதற்காக அவர்கள் எடுத்துள்ள இன்னுமொரு முயற்சி Drone தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகளை படம்பிடிப்பதாகும். அது தொடர்பிலான காட்சித் தொகுப்பு இது.

https://www.facebook.com/ajplusenglish/videos/850063135135195/