சமூக ஊடகம்

குடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அமிதாப் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ட்விட்டரில் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், இப்போதுதான் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். ட்விட்டரில் தமது முதன்முதலான பதிவில், சுதந்திரப் போராட்டம் என்பது நமது
நாட்டின் தனித்துவம் என்று பதிவிட்டு உள்ளார்.இந்த தனித்துவத்தை மதிப்புக் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ள கமல், இளையராஜா இசையில் தாம் பாடிய தேசியப் பாடலையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

தமது தந்தை ட்விட்டர் வலைத் தளத்தில் இணைந்தமைக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்