விளையாட்டு
Typography

ரியோ ஒலிம்பிக் தொடரின் நேற்றைய நான்காம் நாள் போட்டி முடிவுகள் இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 

இந்தியாவின் ஒரே ஒரு வில்லாளன் அதானு தாஸ், வில் வித்தை போட்டிகளில் முதல் இரு சுற்றுக்களிலும் மிக ஆச்சரியமான வகையில் வெற்றி பெற்று ஆடவருக்கான 16 பேர் கொண்ட சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். அவருடைய முதல் 6 வீச்சுக்களில், மூன்று வீச்சுக்கள் மிக அபாரமானவை.  எதிர்வரும் வெள்ளிக் கிழமை அவர் தென் கொரியாவின் செயுங்கியுன் லீயுடன் வில் வித்தையில் மோதுகிறார்.

ஆடவருக்கான ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி மற்றுமொரு குழுப் போட்டியில் ஆர்ஜெண்டீனாவை 2-1 என வீழ்த்தி தனக்கான நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய போதிலும், நேற்று முன் தினம் ஜேர்மனியுடனான போட்டியில் 1-2 என இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

இந்நிலையிலேயே ஆர்ஜெண்டீனாவுடன் வெற்றி பெற்று மறுபடி நம்பிக்கை அளித்துள்ளது. இந்தியா சார்பில் சிங்கிளேசனா சிங், கோதாஜித் காதன்பகம் ஆகியோர் கோல் அடித்தனர். அடுத்த போட்டியில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 

ஆடவருக்கான பாக்ஸிங் போட்டிகளில் இந்தியாவின், விகாஸ் கிருஷ்ணன் யாதவ், அமெரிக்காவின் சார்லஸ் கொன்வெலை வீழ்த்தி காலிறுதிக்கான முன்னைய சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார். 

ஆனால் ஆடவருக்கான படகோட்டல் போட்டியில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த இந்திய வீரர் தட்டு போகனலின் பயணமும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அவர் நேற்றைய காலிறுதிப் போட்டியில் 15வது இடத்தையே பெற முடிந்தது. 

இதேபேன்று பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஹீந்தா சிதுவின் பயணமும் முடிவுக்கு வந்தது. 

தொடர்ந்து பிரகாசிக்கும் மைக்கெல் பெல்ப்ஸ், சவால் கொடுக்கும் போட்டியாளனாக அகதிகள் அணியின் ராமி அனிஸ்!

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் தனது 20 வது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை நேற்றைய போட்டிகளில் வென்றார். இன்னமும் இரு தங்கப்பதக்கங்களை வென்றால், இதுவரை நிலைத்திருக்கும் 21 தங்கப்பதக்கம் வென்ற வீரர் எனும் முன்னைய சாதனை ஒன்றை முறியடித்து, புதிய வரலாறு படைப்பார். 

இதேவேளை நேற்றைய 100 மீற்றர் ஃபிரீ ஸ்டைல் போட்டிகளில் முதன்முறையாக, ஒலிம்பிக்கின் அகதி அணியை பிரதிநிதித்துவப் படுத்தி களமிறங்கிய சிரியாவின் ராமி அனிஸ் 6வது நிலையை பெற்று அடுத்த சுற்றுக்கான தகுதி வாய்ப்பை இழந்தார். ஆனால் அவருக்கு மைதானத்தில் வழங்கப்பட்ட மிகப்பெரும் உற்சாக கரகோசம் நேற்றைய போட்டிகளின் ஹைலைட்ஸ். 

நாளை, 100 மீற்றர் ஃபெக்ஸ்ட்றோக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அவர் தனது ஐடொலான மைகெல் பெல்ப்ஸை  போட்டி முடிவதற்குள் ஏதோ ஒரு புள்ளியில் நேருக்கு நேர் நெருங்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 

முன்னர் தான் வழங்கிய போட்டி ஒன்றில் எதிர்வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு அகதிகள் அணியும் பங்கேற்கக் கூடாது. யுத்தங்கள் முடிவடைந்து, அனைத்து வீரர்களும் அவர்களது நாடுகளின் பெயரால் விளையாடும் வாய்ப்பு உருவாக வேண்டும் என விரும்புகிறேன் என அவர் கூறியிருந்தார். 

இதேவேளை ஹங்கேரியின் இரும்புப் பெண் என அழைக்கப்படும் கதிங்கா ஹொஸ்யு, பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் இந்த வாரத்தில் தனது மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்றார். 

 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியம்ஸ், மூன்றாவது சுற்றுப் போட்டியில் உக்ரெய்ன் வீராங்கணையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் தோற்பட்டை காயத்தால் அவதியுற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆடவருக்கான ரக்பி போட்டியில் ஜப்பானிடம், நியூசிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்