விளையாட்டு
Typography

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட கால போட்டித் தடையை அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை விதித்துள்ளது. 

அத்தோடு, அவர்கள் இவரும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அணித் தலைமைப் பதவியை வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணியுடன் கேப்டவுனில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கமரூன் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இந்த செயற்பாட்டில் டேவிட் வோனருக்கும் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS