விளையாட்டு
Typography

இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆரம்ப போட்டியில் சென்னை அணி தனது முதல் மேட்சிலேயே வெற்றிபெற்றுளது.  டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்து ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. எனினும், பிராவோ சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசி 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து 18வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.

கையில் ஒரு விக்கெட் மட்டும் மீதமிருந்த நிலையில், ஏற்கனவே காயம் காரணமாக களத்தின் வெளியே இருந்த கேதர் ஜாதவ் மீண்டும் பேட் செய்ய வந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

Mumbai Indians Innings 165-4 (20)
Chennai Super Kings Innings 169-9 (19.5)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS