விளையாட்டு
Typography

5-0 என வரலாற்று வெற்றி!

இன்று ஜூன் 14ம் திகதி கோலாகலமாக ரஷ்யாவில் தொடங்கிய உலக கோப்பை காற்பந்து தொடரில் முதலாவது போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வெற்றியின் மூலம், போட்டியை நடத்தும் அணி, முதல் போட்டியில் தோல்வியை அடைந்ததே இல்லை எனும் சாதனை தொடர்கிறது. இதுவரை FIFA நடத்தியுள்ள 21 உலக கோப்பை தொடர்களிலும் போட்டியை நடத்தும் நாடு, முதல் போட்டியில் தோல்வியை அடைந்ததில்லை. 

அதோடு, உலக கோப்பை முதல் போட்டி ஒன்றில் போட்டியை நடாத்தும் அணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் இரண்டாவது தடவை இதுவாகும்.1934ம் ஆண்டு இத்தாலி அமெரிக்காவுக்கு எதிராக 7-1 என வெற்றி பெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.

கடந்த 2014 உலக கோப்பை தொடரில் ரஷ்ய அணி மொத்தமாக 2 கோல்களையே வென்றிருந்தது. இம்முறை முதல் போட்டியிலேயே 5 கோல்களை தனதாக்கியுள்ளது.

1800 மைல்கள் வித்தியாசத்தில் மைதானங்கள்

மொத்தமாக 32 அணிகள் பங்குபெறும் இம்முறை உலக கோப்பை தொடர் 32 நாட்கள் நடைபெறவுள்ளது. 12 மைதானங்களில் போட்டி நடைபெறுகின்றன. 11 நகரங்களில், சுமார் 1800 மைல்கள் வித்தியாசத்தில் ஒவ்வொரு மைதானமும் அமைந்துள்ளன.

ஜேர்மனியா, பிரேசிலா?

நடப்பு சாம்பியனான ஜேர்மனி இம்முறையும் கோப்பையை தனதாக்கினால், 1962ம் ஆண்டுக்கு பிறகு இரு வருடங்கள் தொடர்ந்து உலக கோப்பையை வென்ற அணி எனும் பெருமையை பெறும். பிரேசில் இம்முறை உலக கோப்பையை கைப்பற்றினால், ஆறாவது தடவையாக சாம்பியனாகும் பெருமையை பெறும்.

யார் பலம் வாய்ந்த அணிகள்?

மிகப் பலம் வாய்ந்த அணிகளாக ஜேர்மனி, பிரேசில், 2016ம் ஆண்டு யூரோ சாம்பியன் போர்த்துக்கல், 2014ம் ஆண்டு உலக கோப்பை ரன்னஸ்-அப் சாம்பியன் ஆர்ஜெண்டீனா, பெல்ஜியம், போலந்து, மற்றும் பிரான்ஸ் அணிகள் திகழ்கின்றன.

முதன்முறை உலக கோப்பை தொடரில் விளையாடும் புதிய அணிகள்

பனாமா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் தமது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடுகின்றன.

1982ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பெரு இம்முறை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. எஜிப்து மற்றும் மொரோக்கோ ஆகிய வட ஆபிரிக்க நாடுகளும் நீண்ட காலத்திற்கு பிறகு உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

தகுதியே பெறாத சாம்பியன் அணிகள்!

நான்கு தடவை உலக கோப்பை சாம்பியனான இத்தாலி, தென் அமெரிக்க சாம்பியனான சிலி மற்றும் ஆபிரிக்க பலம் வாய்ந்த அணியான கெமரூன் ஆகியன இம்முறை உலக கோப்பை தொடருக்கு தகுதியே பெறவில்லை.

கிரிக்கெட்டை போன்று காற்பந்திலும் 3rd Umpaire?

முதன்முறையாக VAR எனப்படும் காணொளி உதவியுடன் தவறுகளை கண்டுபிடிக்கும் நுட்பம் இம்முறை பயன்படுத்தப்படவிருக்கிறது. முக்கியமாக ஒரு அணிக்கு பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பை வழங்குவதா இல்லையா என்பது இனிமேல் தேவைப்பட்டால் VAR உதவியுடன் முடிவெடுக்கப்படும்.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்