விளையாட்டு
Typography

நேற்று ஜூன் 15ம் திகதி நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி 3-3 என சமநிலையில் முடிவடைந்தது.

இதில் போர்த்துக்கல் சார்பில் மூன்று கோல்கள் அடித்த ரொனால்டொ புதிய இரு உலக சாதனை படைத்தார். உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை, அமெரிக்க கோப்பை உட்பட உலகின் மிக முக்கிய 8  காற்பந்து தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். அதோடு தொடர்ந்து நான்கு உலக கோப்பை தொடரில் கோல் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையும் அவருக்கு கிடைத்தது. முன்னதாக பேலே, ஸீலர், குலோஸ் ஆகியோர் இப்பெருமையை பெற்றிருந்தனர். 2006 ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளிலிருந்து ரொனால்டோ விளையாடுகிறார்.

நேற்றைய போட்டியில் ஸ்பெயின் அணி சார்பில் டியோகோ கோஸ்டா இரு கோல்களையும் நாச்சோ ஒரு கோலையும் அடித்தனர். ரொனால்டோ ஒரு பெனால்டி கோல், ஒரு ஃபிரீகிக்  கோக் மற்றும் ஒரு ஸ்டிரைக் கோல் என்பவற்றை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

ஸ்பெயின் வெல்லும் சந்தர்ப்பம் இருந்த போதும், ரொனால்டோவை பல முறை அவதானமின்றி தாக்கி வீழ்த்தியும், கோல் கீப்பரின் அசாதாரன தடுப்பு ஒன்றின் மூலம் இப்போட்டியை சமநிலையையாக்கியது போர்த்துக்கல்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மொரோக்கோ - ஈரான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இறுதி வினாடியில் Own Goal ஒன்றை மொரோக்கோ அணியினர் அடித்ததால், ஈரான் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் இரண்டாவது தடவையாக ஈரான் வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.

இதேவேளை எகிப்து - உருகுவே அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் உருகுவே அணி 1 - 0 என வெற்றி பெற்றது. 89 வது நிமிடத்தில் ஜோசே கிமெனேஸ், அந்த அணிக்காக கோல் அடித்தார்.

இன்று ஜுன் 16ம் திகதி நாளை  போட்டிகள் நடைபெறுகின்றன. பிரான்ஸுடன் மோதுகிறது ஆஸ்திரேலியா. ஆர்ஜெண்டீனாவுடன் மோதுகிறது ஐஸ்லாந்து அணி. பெருவுடன் மோதுகிறது டென்மார்க் அணி. குரோஷியாவுடன் நைஜீரியா மோதுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்