விளையாட்டு
Typography

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சம நிலை கோல்களில் முடிந்திருக்கிறது. ஆர்ஜெண்டீனா சார்பில் செர்ஜியோ 19 வது நிமிடத்தில் ஒரு கோல் ஒன்றை அடித்தார். 23 வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் அல்ஃபிரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

1990ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஆர்ஜெண்டீனா அணி, உலக கோப்பை முதல் போட்டியில் வெல்லத் தவறியிருக்கிறது. ஐஸ்லாந்தின் முதல் உலக கோப்பை போட்டி இது. இப்போட்டியை சமநிலைப்படுத்தியது, அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றை ஐஸ்லாந்து கோல் கீப்பர் மிகத் துல்லியமாக கணித்து தடுத்து நிறுத்தினார். நேற்று பிரான்ஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 2-1 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.

பெரு - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டென்மார்க் அணி 0-1 என வெற்றி பெற்றது. பெரு கடும் முயற்சி செய்தும், அவர்களுகு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் தோல்வியை தழுவியது.

குரோஷியா - நைஜீரிய அணிகளுக்கு இடையிலான மற்றூமொரு போட்டியில் குரோஷிய அணி 2-0 என வெற்றி பெற்ற்து. இன்று கொஸ்டா ரிக்கா - செர்பிய அணிகளுக்கு இடையில் ஒரு போட்டியும், ஜேர்மனி - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையில் மற்றுமொரு போட்டியும், பிரேசில் - சுவிற்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறுகின்றன.

இன்றைய போட்டிகளில் மூன்று தென்/மத்திய அமெரிக்க நாடுகளுடன் மூன்று ஐரோப்பிய அணிகள் மோதுகின்றன.

கடந்த உலக கோப்பை தொடரில், ஜேர்மனியிடன் 7-1 என தோற்று வெளியேறிய பிரேசில் அணி, இம்முறை அதற்கு பழி தீர்க்குமா எனும் கேள்வி எழுகிறது. மறுமுனையில் ஃபிஃபா தர வரிசையில் 6 வது நிலையில் இருக்கும் சுவிற்சர்லாந்து அணியும், பிரேசிலுக்கு மிகச் சவாலான அணியாக திகழும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்