விளையாட்டு
Typography

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து ஆட்டங்களில், பலம் வாய்ந்த கொலம்பிய அணியை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது. அதோடு, போட்டி முடிவடைந்த போது தமது இருக்கைப் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் அணியின் ரசிகர்களை பற்றிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பலம் வாய்ந்த போலந்து அணியை செனகல் அணி 2-1 என வீழ்த்தியது.

இதன் மூலம், ஆபிரிக்க கண்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி உலக கோப்பை தொடரில் களமிறங்கியுள்ள அணிகளில் செனகல் அணியே பலம்வாய்ந்த அணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய உலக கோப்பை தொடர்களில் செனகல் அணி, பிரான்ஸ், ஸ்வீடன் அணிகளையும் வீழ்த்தியுள்ளது. நேற்றைய போட்டியில் போலந்து சார்பில் போடப்பட்ட ஒரு Own Goal மற்றும், செனல் அணி சார்பில் நியாங் அடித்த எதிர்பாராத ஒரு கோல் என்பன செனகல் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. செனகல் அணி ரசிகர்கள், போலந்து அணி ரசிகர்களின் இருக்கைகளையும் சுத்தம் செய்துவிட்டுச் சென்றதும் பிரபலமாகியுள்ளது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற மற்றுபோட்டியில் ரஷ்ய அணி - எகிப்து அணியை 3-1 என வீழ்த்தியது. எகிப்து அணியின் Own Goal, மற்றும் ரஷ்ய அணியினர் அடித்த இரு லாவகமான கோல்கள் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தன. இதன் மூலம் தான் விளையாடிய முதல் இரு போட்டிகளிலுமே வெற்றி பெற்று ரஷ்ய அணி  தனது குழுவின் புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்றைய போட்டிகளில் போர்த்துக்கல் - மொரோக்கோ அணிகளுக்கு இடையில் ஆட்டமும், உருகுவே - சவுதி அரேபிய அணிகளுக்கு இடையில் ஒரு ஆட்டமும், ஈரான் - ஸ்பெயின் அணிகளுக்கு இடையில் ஒரு ஆட்டமும் நடைபெறுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்