விளையாட்டு
Typography

நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் போர்த்துக்கல் அணி - மொரோக்கோ அணியை 1-0 என தோற்கடித்தது. இம்முறை உலக கோப்பை தொடரின் நான்காவது கோலை அடித்தார் ரொனால்டோ.

உருகுவே - சவுதி அரேபிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் உருகுவே அணி 1-0 என வெற்றி பெற்றது.

ஈரான் - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்பெயின் அணி பலத்த போராட்டத்தின் மத்தியில் 1-0 என வெற்றி பெற்றது. இன்று டென்மார்க் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஒரு போட்டியும், பிரான்ஸ் - பெரு அணிகளுக்கு இடையில் மற்றுமொரு போட்டியும், ஆர்ஜெண்டீனா - குரோஷியா அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியும் நடைபெறுகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி அடுத்த சுற்றுக்கு ரஷ்யா, உருகுவே அணிகள் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS