விளையாட்டு
Typography

நேற்று இடம்பெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா அணி - குரோஷியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்துள்ளது.

இதன் மூலம் அடுத்த 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இப்போட்டியில் 3-0 என ஆர்ஜெண்டீனாவை வெற்றி கொண்ட குரோஷிய அணி அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது. உலக கோப்பை தொடர் ஒன்றில் தென் அமெரிக்க அணி ஒன்றை வீழ்த்திய முதல் போட்டியாக இப்போட்டி குரோஷிய அணிக்கு அமைந்தது.

1958ம் ஆண்டுக்கு பிறகு ஆர்ஜெண்டீனா அணி, முதல் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல் வித்தியாசத்தில் தோற்ற போட்டியும் இது. அதோடு 1974ம் ஆண்டுக்கு பிறகு, ஆர்ஜேண்டினா அணிக்கு தான் விளையாடிய முதல் இரு தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் வெற்றிபெறாமல் போன முதல் சந்தர்ப்பம் இது. 

இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆர்ஜெண்டீனா பயிற்றுனர் ஜோர்ஜ் சம்போலி கருத்து தெரிவிக்கையில், மெஸ்ஸியை பெரிதும் நம்பியிருக்கின்றனர் அணியினர். ஆனால் அவருடன் இணைந்து விளையாடுவது போல் தெரியவில்லை. மெஸ்ஸியுடன் அணியினருக்கு பெரிதான இணைப்பு இல்லை. இத்தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். அணியை இப்போட்டிக்கு சரியாக தயார் படுத்த நான் தவறிவிட்டேன். முதலாவது கோலுக்கு பிறகு அவர்கள் கடும் உணர்ச்சி வசப்படத்தொடங்கிவிட்டார்கள். அதனால் போட்டியை தமக்கு சாதகமாக மாற்றமுடியவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் முதல் கோலை 53 வது நிமிடத்தில் குரோஷிய அணியின் ஆண்டே ரெபிக் அடித்தார். ஆர்ஜெண்டீனா கோல் கீப்பரின் தவறினால், இலகுவாக கிடைத்த பந்தை அவர் கோலாக மாற்றினார்.

இதேவேளை நேற்று பிரான்ஸ் - பெரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. டென்மார்க் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.

இன்று  பிரேசில் - கொஸ்டா ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியும், நைஜீரியா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியும், செர்பியா - சுவிற்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியும் நடைபெறுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்