விளையாட்டு
Typography

பிரேசில் - கொஸ்டாரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பிரேசில் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் இறுதி 7 நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து இம்முறை உலக கோப்பையின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

பிரேசில் சார்பில் 91வது நிமிடத்தில் பிலிப் கௌண்டின்கோ முதல் கோலையும், நெய்மார் 97வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தனர். முன்னதாக பிரேசில் அணி பல தடவை கோல் அடிக்க முயற்சித்தும், கொஸ்டாரிக்கா அணியினரின் கடும் தடுப்பு ஆட்டம், மற்றும் துரதிஷ்டவசத்தால் பல கோல் முயற்சிகள் தோல்வில் முடிந்தன.

இன்றைய வெற்றியின் மூலம் நான்கு புள்ளிகளை மொத்தமாக பெற்றுள்ள பிரேசில் அணி அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இன்றைய போட்டி முடிந்ததும், நெய்மார் கண் கலங்கிய படி நீண்ட நேரம் மைதானத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். முன்னதாக பல முறை நெய்மாரின் ஆட்டத்தை துவம்சம் செய்த கொஸ்டா ரிக்கா அணியினர் அவரை பல முறை வீழ்த்தியும் இருந்தனர். ஒரு முறை நெய்மார் கோல் கம்பத்திற்கு அருகில் வீழ்ந்திருந்த போது பெனால்டி கோரியிருந்தார். ஆனால் வீடியோ மறுபரிசீலனை மூலம் அவ்வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்