விளையாட்டு
Typography

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து முதல் சுற்றுப் போட்டிகளில் செர்பிய அணியை சுவிற்சர்லாந்து அணி 2-1 என வெற்றி கொண்டது.  

இவ்வெற்றி மூலம் இம்முறை உலக கோப்பை தொடரின் முதன் முதலாக தோல்வி அடையக் கூடிய சந்தர்ப்பம் இருந்த அணி ஒன்று வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே செர்பிய அணி வீரர் தலையால் ஒரு கோல் அடித்து 1-0 என செர்பியாவை முன்னிலைப் படுத்தினார். இடைவேளை வரை 1-0 என செர்பிய அணியே முன்னிலை பெற்றது.

எனினும் சுவிற்சர்லாந்து அணியின் ஆட்டப் போக்கு திடீரென புதிய முகமெடுத்தது. சுவிற்சர்லாந்தின் கிரானிட் ஷாகா 52 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 90வது நிமிடத்தில் ஷெர்டான் ஷகிரி இரண்டாவது கோலை அடித்து சுவிற்சர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இவ்விரு கோல்களுமே சுவிற்சர்லாந்தின் மிகச் சிறந்த கோல்களாகும். 

இன்னுமொரு சுவாரஷ்யமான விடயமும் இருக்கிறது. ஷகிரி கொசோவாவில் பிறந்தவர். சேர்பியாவிலிருந்து தன்னிச்சையாக சுதந்திரம் பெற்ற நாடு கொசோவோ. இன்னமும் முழுமையாக ஒரு நாடாக சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்படவில்லை. ஷகிரியின் குடும்பம் சுவிற்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்ததன் பின்னர் அவர் சுவிற்சர்லாந்தின் பல வெற்றிகளுக்கு காரணமாகியிருந்தார். இன்றைய போட்டியில் அவர் அடித்த கோலால் சுவிற்சர்லாந்து - செர்பியாவை வீழ்த்தியது. இது கொசோவோ மக்களுக்கு இன்னும் பெருமை சேர்த்துள்ளது.  அதே போல், முதல் கோல் அடித்த ஷாகா சுவிற்சர்லாந்தின் பிறந்தவர் என்ற போதும், அவரது பெற்றோர்கள் அல்பானிய இனத்தவர்கள். ஆனால் செர்பியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவ்விருவரின் கோல்களும் செர்பிய அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளது, அரசியல் அளவிலும் சூடுபிடித்துள்ளது.

மறுமுனையில் நைஜீரியா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நைஜீரிய அணி 2-0 என ஐஸ்லாந்தை தோற்கடித்தது. அந்த அணியின் அஷ்மெட் மூசா இரு கோல்களையும் தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம், அந்தக் குழுவில் குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தக்கவைத்துள்ளன. இன்று சனிக்கிழமை சுவீடன் - ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியும், தென் கொரியா - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியும் நடைபெறுகிறது. பெல்ஜியம் அணியும் - துனீசியாவை இன்று எதிர்கொள்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்