விளையாட்டு
Typography

நேற்றைய உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது.

ஜப்பான் - செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமநிலை கண்டது. போலந்து - கொலம்பிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொலம்பிய அணி 3-0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போலந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இன்று சவுதி அரேபியா - எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், பலம் வாய்ந்த உருகுவே - ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியும், ஈரான் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஸ்பெயின் - மொரொக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறுகிறது.

இதுவரை நடந்து முடிந்த போட்டி நிலவரப்படி அடுத்த 16 அணிகள் சுற்றுக்கு, ரஷ்யா, உருகுவே, இங்கிலாந்து, பிரான்ஸ், குரோஷியா, மெக்ஸிகோ, பெல்ஜியம் அணிகள் ஏற்கனவே தெரிவாகியுள்ளன. 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்