விளையாட்டு
Typography

ரியோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆடவருக்கான ஹாக்கி அணி, 36 வருடங்களின் பின்னர் நாக்-அவுட் காலிறுதி சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என தோல்வி அடைந்த போதும், மறுமுனையில் ஆர்ஜெண்டீனா - ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான போட்டி 4-4 என சமநிலை கண்டதால் இந்தியாவின் காலிறுதி உறுதி செய்யப்பட்டது. 

காலிறுதிக்கு முதல் தனது குழுவின் இறுதிப் போட்டியில் கனடாவுடன் மோதும் இந்தியா அதில் தோல்வி அடைந்தாலும் காலிறுதிக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்தியாவின் மகளீர் ஹாக்கி அணி அமெரிக்காவிடமும் 3-0 என தோல்வி அடைந்ததன் மூலம் இம்முறை ஒலிம்பிக்கில் எந்தவித வெற்றியையும் பெறாது தவிக்கிறது. 

இதேவேளை இந்திய அணி பேட்மிண்டன் போட்டிகளில் முதல் சுற்றுக்களில் பிரகாசமாக தனது திறனை வெளிப்படுத்தியது. சாய்னா நேவால், பி.வி. சிந்து, கிதம்பி சிறீகாந்த் என ஒற்றையர் போட்டிகளில் மிகச் சிறப்பாக தமது திறனை வெளிப்படுத்தி அடுத்தச் சுற்றுகளுக்கு தெரிவாகினர்.  இதேவேளை இரட்டையர் கலப்பு டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்ஷா - ரோஹன் போபன்னா ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் சென்றுள்ளது. 

"அடுத்த உசைன் போல்டும் இல்லை, அடுத்த மைக்கெல் பெல்ப்ஸும் இல்லை, நான் தான் முதல் சைமொன் பில்ஸ்"

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டிகளில் தனது 22 வது தங்கப்பதக்கத்தை நேற்று வென்றார். அவருடைய நீச்சல் சாதனை இன்னமும் தொடரவிருக்கிறது.  இதேவேளை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கணையான 19 வயதான Simone Biles, குழுப் போட்டிகளில் மாத்திரமல்லாது, தனிச் சாகசத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி, உலகின் மிகச்சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கணையாக தன்னை தற்போது நிரூபித்துள்ளார். 

19 வயதான Simone Biles, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஐந்தாவது தங்கப்பதக்கத்தை நேற்று வென்றார்.  இதுவரை ஒரே ஒலிம்பிக்கில் ஐந்து தங்கப்பதக்கங்கள் எனும்  இச்சாதனை புரிந்த உசைன் போல்ட், மைக்கெல் பெல்ப்ஸ் பட்டியலில் இணைந்துள்ள சைமொன் பில்ஸ், இச்சாதனை குறித்து கூறுகையில்  «நான் அடுத்த உசைன் போல்ட்டும் இல்லை, மைக்கெல் பெல்ப்ஸும் இல்லை. நான் தான் முதலாவது Simone Biles என்றார். குடும்பத்தின் வறுமை காரணமாக பிரிதொரு பெற்றோரால் த்தெடுத்து வளர்க்கப்பட்டவர் சைமொன் பில்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை ரக்பி போட்டிகளில் முதன்முறையாக ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற ஃபுஜி அணி, ஒலிம்பிக் வரலாற்றில் தனது முதலாவது தங்கப்பதக்கத்தையும் இதன் மூலம் சுவீகரித்துக் கொண்டது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்