விளையாட்டு
Typography

ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் ஸ்பெயின் மற்றும் ரஷ்யா ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 2 ஆவது சுற்று நாக் அவுட் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 இற்கு 1 என சமநிலை வகித்தன.

இதையடுத்து கடும் மழைக்கு மத்தியிலும் ஒதுக்கப் பட்ட கூடுதல் நேரத்தில் கூட இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில் வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பெனால்டி சூட் அவுட் வழங்கப் பட்டது. இதில் ஸ்பெயின் இரு வாய்ப்புக்களைத் தவற விட முடிவில் ரஷ்யா 4 இற்கு 3 என திரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் இம்முறை உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை நடத்தும் ரஷ்ய அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஸ்பெயின் வெளியேறுகின்றது.

இதேவேளை இன்னும் சற்று நேரத்தில் குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் பங்கேற்கும் நாக் அவுட் போட்டி இடம்பெறுகின்றது. ஏற்கனவே சனிக்கிழமை பிரான்ஸ் மற்றும் ஆர்ஜெண்டினாவுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் 4 இற்கு 3 என்ற கணக்கில் பிரான்ஸும் உருகுவே போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் 2 இற்கு 1 என்ற கணக்கில் உருகுவேயும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இதன் மூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் முதலாவது காலிறுதிப் போட்டியில் ஈடுபடவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ரஷ்யா ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் அதனுடன் போட்டியிட இன்று மாலை டென்மார்க் மற்றும் குரோஷியா அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

நாளை திங்கட்கிழமை நாக் அவுட் சுற்றில் பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோவும் மறுபுறம் பெல்ஜியம் மற்றும் ஜப்பானும் மோதுகின்றன. இதேவேளை எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி சனிக்கிழமை 3 ஆம் இடம் பெறும் அணிக்கான போட்டியும் இம்முறை FIFA 2018 இறுதிப் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையும் ஒழுங்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்