விளையாட்டு
Typography

இன்று சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற 2 ஆவது சுற்று நாக் அவுட் போட்டியில் சுவீடன் அணி 2 ஆவது பாதியில் திறமையான கோல் ஒன்று அடித்து வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பம் முதற்கொண்டே சுவிட்சர்லாந்து கடுமையாகப் போராடிய போதும் அதன் பல கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் சுவீடனின் திறமையான தடுப்புக்கள் மற்றும் கோல் கீப்பரின் திறமையால் இயலாது போயின.

1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக இம்முறை சுவீடன் அணி ஃபிபா உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து அணியோ கடந்த 4 உலகக் கிண்ண ஃபிபா போட்டிகளிலும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைய முடியவில்லை.

இதேவேளை இன்று இங்கிலாந்து மற்றும் கொலம்பிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நாக் அவுட் போட்டியில் தரப்பட்ட நேரத்தில் இரு அணியும் தலா ஒரு கோல்கள் அடித்ததால் மேலதிக 30 நிமிடம் வழங்கப் பட்டது. அதிலும் கோல் அடிக்கத் தவறியதால் பெனால்டி சூட் அவுட் தரப்பட்டது. இதில் 4 இற்கு 3 என திரில் வெற்றி பெற்று இங்கிலாந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்றுடன் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நிறைவுற்றுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS