விளையாட்டு

சனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.

முதற் பாதியில் முதலாவது கோலை ரஷ்யா தான் அடித்தது என்ற போது 8 நிமிடம் கழித்து குரோஷிய வீரர் ராமரிச் அசாத்தியமான கோலை அடித்து நிலமையைச் சமன் செய்தார்.

2 ஆவது பாதியில் இரு அணிகளும் தொடர்ந்து கடுமையாக விளையாடிய போதும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து தரப்பட்ட 30 நிமிட மேலதிக நேரத்தில் ஆட்டம் ஆரம்பித்து 5 நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கினை சாதகமாகப் பயன்படுத்தி குரோஷிய வீரர் டொமாகோ விடா ஹெட்டர் கோல் அடிக்க குரோஷியா முன்னிலை பெற்றது. இடையில் காயம் அடைந்த போதும் வேறு வழியின்றி விளையாடிய குரோஷிய கோல் கீப்பர் சுபாஷிச் ரஷ்யாவின் இரு அட்டகாசமான அட்டாக்குகளைத் தடுத்தி நிறுத்தினார்.

ஆனால் எதிர்பாராத விதமாக 14 நிமிடத்துக்குள் ரஷ்யாவும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை தலையால் அடித்து மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ரஷ்ய வீரரான ஃபெர்ணாண்டஸ் தான் ரஷ்ய கடைசி நிமிடங்களில் கண்ணீர் சிந்தவும் காரணமானார். அதாவது மேலதிக நேரம் முடிவடைய நடைபெற்ற பெனால்டி சூட் அவுட்டில் ரஷ்யா மற்றும் குரோஷியா ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு கோலை மிஸ் பண்ணிய போதும் ரஷ்ய வீரர் பெர்னாண்டஸ் மிக இலகுவாக கோல் கம்பத்துக்குள் அடிக்க வேண்டிய பந்தை அலட்சியமாக கம்பத்துக்கு வெளியே அடித்து 2 ஆவது வாய்ப்பையும் மிஸ் பண்ணி ரஷ்யாவின் தோல்விக்குக் காரணமாகி விட்டார்.

இதனால் இம்முறை ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் சொந்த மண்ணில் ரஷ்யா அரையிறுதிக்குள் நுழையவோ சேம்பியனாகவோ மிகவும் எதிர்பார்த்திருந்த ரஷ்ய ரசிகர்கள் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர். மறுபுறம் சனிக்கிழமை இங்கிலாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து இலகு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இவ்வருடம் உலகக் கிண்ண கோப்பைப் போட்டிகளில் எந்தவொரு ஆசிய ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகளும் அரையிறுதிக்குள் நுழையவில்லை அதாவது அரையிறுதியில் மோதும் அனைத்து அணிகளும் ஐரோப்பிய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது அரையிறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நேரப்படி இரவு 8 மணிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் குரோஷியா ஆகிய அணிகளுக்கு இடையே புதன்கிழமை இரவு 8 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணிகளைப் பொறுத்து 3 ஆவது இடத்துக்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் இவ்வருடம் ஃபிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஜூலை 15 அதாவது எதிர்வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது