விளையாட்டு

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதே அணி தான் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தியிருந்த போதும் அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவி இருந்தது.

இதற்கு முன்பு 1986 ஆமாண்டில் 4 ஆவது இடத்தைப் பிடித்தது தான் பெல்ஜியத்தின் மிகச் சிறந்த திறமை வெளிப்பட்ட சந்தர்ப்பமாகும். இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை 1966 ஆம் ஆண்டு அது சேம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. ஆனால் இம்முறை இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரிகேன் 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளார். இந்நிலையில் 3 ஆம் இடத்திலுள்ள பெல்ஜியத்துக்கு ரூ 161 கோடியும் 4 ஆவது இடத்திலுள்ள இங்கிலாந்துக்கு ரூ 148 கோடியும் பரிசுத் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஆவது ஃபிபா உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை ஐரோப்பிய நேரப்படி மாலை 5 மணிக்கு லூஸ்னிக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் பிரான்ஸும் குரோஷியாவும் மோதுகின்றன. இப்போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற 48% வீதமும், குரோஷிய அணி வெற்றி பெற 23% வீதமும் போட்டி டிராவில் முடிய 29% வீதமும் இருப்பதாக ஃபிபா அமைப்பு கணித்துள்ளது.