விளையாட்டு

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை நீடிப்பார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலக்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

அத்தோடு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டிகளுக்கும் அஞ்சலோ மத்தியூஸ் அணித்தலைவராக இருப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.