விளையாட்டு

இலங்கைக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ண  டில்சான், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடிய பின்னர், தன்னுடைய ஓய்வு அறிவித்தலை அவர் வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள டில்சான், கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றார்.