விளையாட்டு

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ‘முரளி- வோர்ன்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.  

ஏற்கனவே 2:0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று புதன்கிழமை நிறைவடைந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இலங்கை அணி 163 ஓட்டங்களினால் வெற்றி கொண்டது.  

இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரொன்றை அனைத்து போட்டிகளையும் வெற்றி கொண்டு இலங்கை கைப்பற்றியுள்ளது